இஸ்லாமும் - அறிவியலும்
ஓர் கலந்துரையாடல்..!
(பாகம் - 6)
Courtesy: www.islamway.com
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்
பாப்: மனித இனத்தைப் பற்றி அருள்மறை குர்ஆன் என்ன சொல்கிறது?
யூனுஸ்: தாங்கள் கேட்ட இந்த கேள்விக்கு ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதக் கூடிய அளவிற்கு பதிலளிக்கக் கூடியதாகும். இருப்பினும் குர்ஆன் - மனிதன் கருவில் உருவாவது முதல் - மரணித்த பின் மண்ணரையில் புதைக்கப்படும் வரை மனிதனைப் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிவிக்கிறது. அருள்மறை குர்ஆன் மனித கரு உருவாவதைப் பற்றிய மிகத் தெளிவான விபரங்களை காட்சிப் பொருளாக வைக்கிறது என்று சொன்னால் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?.
பாப்: தொடருங்கள். மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது..!
யூனுஸ்: கருவுற்ற பிறகு - சினை முட்டையானது கருவரையில் வளர்ச்சி அடைவதற்காக ஒரு குறிப்பிட்ட காலம் வரை வைத்திருக்கப்படுகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். இதைப்பற்றி அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ் - ன் 5வது வசனம் குறிப்பிடுகிறது:
'மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கர்ப்பப்பையில் தங்கச் செய்கிறோம், பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.'
மனிதன் கருவாக உருவாகும்போது 'அலக்' என்ற நிலையிலிருந்ததைப்பற்றி அருள்மறை குர்ஆன் ஐந்து வசனங்களில் சுட்டிக்காட்டியுள்ளதை தாங்கள் அறிவீர்களா?. உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனின் 96வது அத்தியாயம் ஸுரத்துல் அலக் - ன் ஒன்று மற்றும் இரண்டாவது வசனம் மனிதன் 'அலக்' என்ற நிலையிலிருந்ததைப் பற்றி சுட்டிக் காட்டுகிறது:
'யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக! (அல்லாஹ்) 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனைப் படைத்தான்.'
அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ் - ன் 5வது வசனமும், 23வது அத்தியாயம் ஸுரத்துல் முஃமினூன் - ன் 14வது வசனமும், 40 வது அத்தியாயம், மற்றும் 75வது அத்தியாயத்திலும் இதே கருத்தைத் தரும் மேலும் பல வசனங்கள் உள்ளன.
தவிர மனிதன் எவ்வாறு உருவாக்கப்பட்டான் என்பதை அருள்மறை குர்ஆனின் 23வது அத்தியாயம் ஸுரத்துல் முஃமினூனின் 14வது வசனம் மிகத் தெளிவாக தெரிவிக்கிறது:
'பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம், பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டம் ஆக்கினோம், பின்னர் அத்தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதானாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.'
மனிதன் படைக்கப்படும்போது அவனது புலன்கள் கொடுக்கப்படும் வரிசைக்கிரமங்கள் பற்றி அருள்மறை குர்ஆனின் 32வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 9வது வசனம் '..இன்னும் அவன் உங்களுக்கு, செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும் அமைத்தான்.. என்று தெளிவாக அறிவிக்கின்றது. இன்றைய மருத்துவ உலகம் மனிதனுக்கு கருவரையில் புலன்கள் படைக்கப்படும் வரிசைக்கிரமங்கள் பற்றி மறுக்கமுடியாது. மாறாக, மனிதக் கரு உருவாகி 5ஆம் மாதத்தில் செவிப்புலனும், 7ஆம் மாதத்தில் பார்வைப்புலனும் கிடைக்கிறது என்று கூறி அருள்மறை குர்ஆனின் வசனங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது. மேலும் சமீபத்தில், அதாவது 1940 ஆம் ஆண்டுகளின் இறுதியில்தான் அறிவியலால் இந்த உண்மைகளை கண்டறிய முடிந்தது. தவிர கனடாவிலுள்ள டொரான்டோ பல்கலைக்கழகத்தின்; கருவியல் துறையில் பணியாற்றிய கருவியல் வல்லுனரான பேராசிரியர் கீத் மோரிடம் - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட கருவியல் வளர்ச்சிகளின் நிலையையும், நவீன அறிவியல் கண்டுபிடித்துள்ள கருவியல் வளர்ச்சிகளின் நிலை பற்றியும் ஒப்பிட்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. 'இஸ்லாமியர்கள் இறைவனிடமிருந்து வந்தது என்று ஆணித்தரமாக நம்பும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட அருள்மறை குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள் நூறு சதவீதம் துல்லியமானது' என்பதே அவரது கருத்தாக இருந்தது.
பாப்: இது சரியாக இருக்கும் பட்சத்தில், இது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்படுவதில்லையே. அது ஏன்?.
யூனுஸ்: இல்லை. தாங்கள் சொல்வது சரியல்ல. அவ்வப்போது ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை பிரசுரிக்கின்றன. உதாரணத்திற்கு ';கனடாவிலிருந்து வெளியாகும் தி சிட்டிசன் என்ற பத்திரிக்கை 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியிட்ட - அருள்மறை குர்ஆன் - பதிநான்கு நூற்றான்டுகளுக்கு முந்தைய வேதப் புத்தகம் - என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள். தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் (டெல்லி பதிப்பு) 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி வெளிவந்த 'அறிவியலை மிஞ்சும் அருள்மறை குர்ஆன்' என்ற கட்டுரையையும் படித்துப் பாருங்கள். இருப்பினும் ஊடகங்கள் யாவும் மேற்கத்தியர்களின் கைவசம் இருப்பதால் இவை போன்ற செய்திகள் வெளியிடப்படுவதில்லை, அல்லது இதுபோன்ற செய்திகள் மறைக்கப்படுகின்றன என்றே கொள்ள வேண்டும்.
பாப்: உண்மையிலேயே இது மிகவும் சுவராஸ்யமாக இருக்கிறது..! மேலும் தொடருங்கள்..!
யூனுஸ்: இந்த சந்தர்ப்பத்தில் எனது நினைவிற்கு வந்த அருள்மறை குர்ஆன் கூறும் மிக முக்கியமான வசனம் ஒன்றை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அருள்மறை குர்ஆனின் 41வது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 53வது வசனம் கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறது:
'நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும் - அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்'
யூனுஸ்: நீரிழிவு நோயைப் பற்றி அருள்மறை குர்ஆன் கூறுகிறது. இது பற்றி தாங்கள் அறிவீர்களா?.
(இன்ஷா அல்லாஹ்.. உரையாடல் தொடரும்)

No comments:
Post a Comment