இஸ்லாமும் - அறிவியலும்
ஓர் கலந்துரையாடல்..!
(இறுதிப் பாகம்)
Courtesy: www.islamway.com
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்
ஓர் கலந்துரையாடல்..!
(இறுதிப் பாகம்)
Courtesy: www.islamway.com
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்
யூனுஸ்: நீரிழிவு நோயைப் பற்றி அருள்மறை குர்ஆன் கூறுகிறது. இது பற்றி தாங்கள் அறிவீர்களா?.
பாப்: என்ன சொல்கிறீர்கள் தாங்கள்?..
யூனுஸ்: சில உணவுவகைகள் மனிதன் உண்பதற்கு ஏற்றவையல்ல என்பதால் - இஸ்லாம் அவ்விதமான உணவுகளை மனிதர்கள் உண்பதற்கு தடை செய்துள்ளது.
பாப்: நாம்; மனிதன் உண்ணக்கூடிய உணவு பற்றி பேசிக் கொண்டிருப்பதால் - இஸ்லாமியார்கள் ஹலால் மற்றும் ஹராம் என்கிற வார்த்தைகளுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? என்பதை எனக்குச் சொல்லுங்கள். அதன் பொருளையும் எனக்குத் தெரிவியுங்கள்.
யூனுஸ்: ஹலால் - என்றால் அனுமதிக்கப்பட்டவை என்றும், ஹராம் என்றால் விலக்கப்பட்டவை என்றும் அருள்மறை குர்ஆன் ஹலால் மற்றும் ஹராம் என்கிற வார்த்தைகளுக்குரிய வித்தியாசத்தை விளக்குகிறது.
பாப்: தாங்கள் இதற்கு ஓர் உதாரணம் கொடுக்க முடியுமா?
யூனுஸ்: கண்டிப்பாக! எல்லா வகையான இரத்தமும் மனிதன் உண்ணுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்று இஸ்லாம் கூறுகிறது. இரத்தத்தை இரசாயனப் பரிசோதனை செய்து பார்த்தால் - இரத்தத்தில் - மனித நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய யூரிக் அமிலம் மிகுதியாக இருப்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.
பாப்: யூரிக் அமிலத்தின் நச்சுத் தன்மைப் பற்றி தாங்கள் சொல்வது சரியானதுதான்..! மனித உடலில் யூரிக் அமிலம் ஒரு கழிவுப்பொருளாகத்தான் கருதப்படுகிறது. மனித உடலில் உள்ள 98 சதவீதம் யூரிக் அமிலமும் சிறுநீரகத்தின் உதவியால் இரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, சிறுநீர் மூலமாக வெளியேற்றப்படுகிறது.
யூனுஸ்: கால்நடைகளை அறுப்பதற்கு இஸ்லாம் வலியுறுத்தும் 'ஸாபிகா என்னும் முறையை தாங்கள் இப்போது ஏற்றுக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்..!
பாப்: அப்படியா..! அது என்ன?
யூனுஸ்: கால்நடைகளை அறுப்பதற்கு முன்னால் இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்து, கால்நடையின் மற்ற பகுதிகளை காயப்படுத்தாமல், கூர்மையான கத்தியால் கால்நடையின் கழுத்து நரம்பை மட்டும் அறுப்பதற்கு ஸாபிகா என்று பெயர்.
பாப்: ஓகோ..! கால்நடையின் முக்கியமான பாகத்தில் வேகமாகத் தாக்கி, அதன் உயிரைப் போக்குவதற்கு பதிலாக, கால்நடையின் கழுத்து நரம்பை துண்டித்து, அதன் உடலில் உள்ள இரத்தம் முழுவதையும் போக்கி - கால்நடையைக் கொல்வது..! அதுதானே..!
யூனுஸ்: ஆம்..! அதுவேதான். கால்நடையின் முக்கியமான பாகங்களான இதயம் அல்லது கல்லீரல் அல்லது மூளை போன்ற பகுதியைத் தாக்கி கால்நடையைக் கொல்ல முயலும்போது கால்நடை உடனடியாக உயிரிழக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் - அதன் இரத்தக் குழாய்களில் உரைந்து உடலின் முழு சதைப் பகுதிக்கும் பரவுகிறது. இரத்தத்தில் இருக்கும் யூரிக் அமிலத்தின் காரணமாக, கால்நடையின் சதைப்பகுதி முழுவதும் கெட்டுப்போவதுடன், கால்நடையின் சதைப்பகுதி மனிதன் உண்ண இயலாத தன்மைக்கு மாறிவிடுகிறது. இந்த விபரம் சமீபத்தில்தான் நமது மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாப்: மீண்டும் மனிதன் உண்ணக் கூடிய உணவு பற்றியதுதான். பன்றி இறைச்சி சாப்பிடுவதை முஸ்லிம்கள் வெறுக்கிறார்களே. அது ஏன்?.
யூனுஸ்: உண்மையிலேயே அருள்மறை குர்ஆன் மனிதர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதை தடை செய்கிறது என்பதோடு, கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளும் மனிதர்கள் பன்றி இறைச்சி உண்பதை தடை செய்கிறது. 'பன்றி இறைச்சி உண்பதற்கு ஏற்றதல்ல. பன்றியின் இறந்த உடலை நீங்கள் தொடுவதும் கூடாது. பன்றி உங்களுக்கு அசுத்தமானது.' என்று பைபிளின் லெவிட்டிக்கஸ் - அத்தியாயம் 11 ன் 8வது வசனம் பன்றி இறைச்சி பற்றிக் கூறுகிறது. இயற்கையியே பன்றி இஸ்லாமிய முறையில் அறுக்கப்படக் கூடிய அளவிற்கு கழுத்து இல்லாது அமைந்த மிருகமாகும் என்கிற செய்தி உங்களுக்குத் தெரியுமா?. அப்படி பன்றி இறைச்சி உண்பதற்கு ஏற்றது என்று கருதியிருந்தால் - பன்றியை படைத்த இறைவன் அதற்கு கழுத்தையும் படைத்து அனுப்பியிருப்பானே..! இதெல்லாம் தவிர, பன்றி இறைச்சியை எந்த விதத்தில் தின்றாலும், உண்டாகும் தீமைகளைப் பற்றி தாங்கள் நன்றாக அறிவீர்கள் என்று எண்ணுகிறேன்.
பாப்: பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்வதும் வாதம் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வருவதற்கு காரணமாக அமைந்திருப்பதாக மருத்துவ அறிவியலின் சமீபத்திய கண்டுபிடிப்பாகும்.
யூனுஸ்: ஆம்..! அவைகைளத் தவிர, நாம் இரத்தத்தில் கல்நதிருக்கும் உள்ள யூரிக் அமிலம் பற்றி விவாதித்தோம். பன்றி இறைச்சியில் இருக்கும் யூரிக் அமிலம் - பன்றி இறைச்சி உண்பவர்களின் உடலில் கலப்பதுடன், அதிலுள்ள 2 சதவீத யூரிக் அமிலம் மாத்திரம் மனித உடலிலிருந்து வெளியாகிறது. மீதமுள்ள 98 சதவீத யூரிக் அமிலமும் மனித உடலில் தங்கிவிடுகிறது. இதனால் பன்றி இறைச்சி உண்பவர்களுக்கு பக்கவாதம் மற்றும் மூட்டுவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது.
பாப்: நன்று..! நாம் இறங்கும் நேரம் வந்து விட்டது. நமது சீட் பெல்ட்டை இறுக்கிக் கொள்வோம். ஒன்று மட்டும் உண்மை. இது போன்ற விவாதங்களில் ஈடுபட்டுவிட்டால் நேரம் போவதே தெரிவதில்லை. நான் இதுவரை அறிந்திராத எத்தனையோ செய்திகளை நம்முடைய இந்த விவாதத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். இதுபோன்ற செய்திகளை கேட்க மேலும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன். இப்போது தெரிவியுங்கள்..! அருள்மறை குர்ஆனின் அடிப்படையான கருப்பொருள் என்ன?.
யூனுஸ்: அருள்மறை குர்ஆனின் அடிப்படை கருப்பொருள் என்னவெனில் பாவங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுதல். இந்த உலக வாழ்க்கையிலும், மனிதன் இறந்ததற்குப் பின்னால் உள்ள மறுமை வாழ்க்கையிலும் பாவ மீட்சி பெறுவது. அருள்மறை குர்ஆன் மனிதர்களால் அறியப்பட்ட எந்த கலைக்கும் உட்பட்டதல்ல. மாறாக அருள்மறை குர்ஆன் மனிதர்களைப் பார்த்து அறிவுரை கூறுவதால், மானிடர் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் சார்ந்திருக்கிறது. நாம் நமது விவாதத்தில் விவரித்தது போன்று, அருள்மறை குர்ஆன் மனிதர்களால் மிக தாமதமாகக் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளைக் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றி நிற்கிறது.
'அறிவியலைப் பற்றி சிறிதளவே அறிந்தவன் இறைநம்பிக்கை இல்லாதவனாகிறான். ஆனால் அறிவியலைப் பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளவனோ, இறை நம்பிக்கையில் மிகுந்த ஈடுபாடு கொள்கிறான்'
என்று சர் பிரான்ஸிஸ் என்ற அறிஞர் சொன்ன வார்த்தைகள் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகின்றது.
அதன் பிறகு இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சீட் பெல்ட்டை இறுக்கிக் கட்டிக் கொண்டு, விமானம் தரையிறங்க காத்திருந்தனர்.
எல்லாம் அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே..!
இத்துடன் உரையாடல் முடிவடைந்தது.
No comments:
Post a Comment