இஸ்லாமும் - அறிவியலும்
ஓர் கலந்துரையாடல்..!
(பாகம் - 4)
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்
ஓர் கலந்துரையாடல்..!
(பாகம் - 4)
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்
யூனுஸ்: சுவையான நீரும், உப்பு நீரும் ஒன்றாக கலப்பதில்லை என்பதை அறிவியலறிஞர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்
பாப்: ஆம். அது முற்றிலும் சரியானது. இந்நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து கண்டறியப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நைல் நதி - மத்திய தரைக்கடலில் கலக்கும் இடங்களில் குறிப்பாக வளைகுடா கடல்பகுதியில் சுவையான நீரும், உப்பு நீரும் பலல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒன்றோடொன்று கலக்காமலேயே ஓடுவதை ஆய்ந்தறிந்துள்ளார்கள்.
யூனுஸ்: நன்று. இதுபற்றி அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபுர்கானின் 53வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது
'அவன் தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான், ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது, மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.'
இதுபோன்ற செய்தி அருள்மறை குர்ஆனின் 55வது அத்தியாயம் ஸுரத்துர்ரஹ்மானின் 19 மற்றும் 20 வசனங்ளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது:
'அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீற மாட்டா. '
பாப்: அப்படியெனில் யாராவது அரபியர்கள் கடலில் மூழ்கி அல்லது கடலில் நீ;ந்திச் சென்று இது பற்றிய விபரத்தை அறிந்திருக்கலாம் இல்லையா..?.
யூனுஸ்: அருள்மறை குர்ஆன் இதுபற்றி குறிப்பிடும்போது - அதனை யாராலும் பார்க்கவோ அல்லது உணரவோ முடியாது என்று திட்டவட்டமாக மறுப்பதை, தாங்கள் உணரத் தவறி விட்டீர்கள். எனவே அதை யாரும் பார்த்திருக்க முடியாது.
பாப்: அப்படியா..? டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி உயிரினங்கள் அனைத்தும் நீரிலிருந்தான் தோன்றின என்கிறது. இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை எனக்கு விளக்குவீர்களா?.
யூனுஸ்: கண்டிப்பாக விளக்குகிறேன். ஆனால் அதற்கு முன்னால் - டார்வினின் பரிணாhம வளர்ச்சி விதி நீரிலிருந்தான் உயிரினங்கள் தோன்றின என்ற முடிவுக்கு ஏன் வந்தது என்பதை தெரிவிப்பீர்களா?
பாப்: நல்லது. டார்வினின் பரிணாம வளர்ச்சி விதி - இந்த முடிவுக்கு வருவதற்கு முதல் காரணம் மனித உடலின் மூலக் கூறுகளில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீரினால் ஆனது என்பதுவே.
யூனுஸ்: இதைத்தான் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 30வது வசனம் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறது:
'...உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?..!'
தண்ணீருக்கு பஞ்சம் உள்ள பாலைவன மண்ணில் பிறந்த எந்த ஒரு அரபியாவது மனிதன் மாத்திரம் அல்ல, உயிருள்ள ஒவ்வொரு இனமும் நீரைக் கொண்டே படைக்கப்பட்டிருக்கிறது என்பதை கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க முடியுமா?. கூறுங்கள் நண்பரே?.
பாப்: உயிரணுவின் முக்கியப் பகுதியான சைட்டோப்ளாஸம் (ஊலவழிடயளஅ) 80 சதவீதம் தண்ணீரால் ஆனது என்பதை நான் அறிவேன். மேலும் உயிருள்ள ஒவ்வொரு இனமும் 50 சதவீதம் முதல் 90 சதவீதம்வரை நீரினால் ஆனது என்பதையும் நான் அறிவேன்.
யூனுஸ்: அறிவியலால் சரி என்று நிரூபிக்கப்பட்ட இந்த உண்மைகளையெல்லாம் 14நூற்றாண்டுகளுக்கு முன்பாக யாரால் அல்-குர்ஆனில் குறிப்பிட்டிருக்க முடியும்?. இன்றைய நவீன அறிவியலால் தவறு என்று நிரூபிக்கப்பட முடியாத நூற்றுக் கணக்கான அறிவியல் உண்மைகளை அருள்மறை குர்ஆன் குறிப்பிட்டுள்ளது. மேலும் நம் விவாதத்தை தொடருவதற்கு முன்பு - பிரிந்துபோன கண்டங்களைப் பற்றிய கோட்பாடு - (Theory of Drifting Continents) என்றால் என்ன என்பது பற்றி எனக்கு விளக்குவீர்களா?.
பாப்: நிச்சயமாக.! இப்போது கண்டங்களாக பிரிந்து கிடக்கும் நிலப்பரப்புகள் யாவும் ஒரு காலத்தில் ஒன்றான இணைந்து இருந்தவைகளாகும். பிpறகு ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பின் காரணமாக அவைகள் எல்லாம் தனித்தனியான கண்டங்களாக பிரிந்து சென்றன அல்லது பூமியின் பல பகுதிகளுக்கும் தள்ளப்பட்டது எனக் கொள்ளலாம். எனவேதான் தாங்கள் உலக வரைபடத்தை மிகவும் கவனத்தோடு பார்வையிட்டால், தென் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதி, ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியோடு சரியாக பொருந்திப் போவதைக் காணலாம்.
யூனுஸ்: இந்த செய்தியைப் பற்றி அருள்மறை குர்ஆனின் 79வது அத்தியாயம் ஸுரத்துன் நாஜியாத்தின் 30வது வசனம் தெளிவாகத் தெரிவிக்கிறது:
இதன் பின்னர் - அவனே பூமியை விரித்தான். அதிலிருந்து அதன் தண்ணீரையும் - அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
இந்த வசனம் இறைவனே பூமியை விரித்தான், பின்னர் பூமியிலிருந்து தண்ணீரையும், உயிரினங்களுக்குள்ள மேய்ச்சல் பொருளையும் வெளியாக்கினான் என்றும் கூறுகிறது.
பாப்: நீங்கள் அருள்மறை குர்ஆனை நிரூபிப்பதற்கு, அறிவியல் அறிவை பயன்படுத்துகிறீர்களா?.
(இன்ஷா அல்லாஹ்.. உரையாடல் தொடரும்)
No comments:
Post a Comment