இஸ்லாமும் - அறிவியலும்
ஓர் கலந்துரையாடல்..!
(பாகம் - 3)
Courtesy: www.islamway.com
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்
யூனுஸ்: அருள்மறை குர்ஆன் வானவியலைப் பற்றி மாத்திரம் சொல்லவில்லை. அருள்மறை குர்ஆனின் மேலும் பல வசனங்கள் நீர் நிலைகளைப் பற்றியும் தெரிவிக்கிறது.
பாப்: மேலே சொல்லுங்கள்..! நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
யூனுஸ்: பூமியிலும், நிலத்தடியிலும் உள்ள நீர் நீராவியாக மாறி வானத்தை அடைந்து மேகமாக மாறுவதைப் பற்றியும், இந்த மேகங்கள் ஒன்று சேர்ந்து கார்மேகமாக மாறி மழையாக பொழிவதையும் பற்றி அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் 43வது வசனம் மிகத் தெளிவாக அறிவிக்கின்றது:
' (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச் செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான் , அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்,'
மேலும் அரு;ளமறை குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துல் ஜுமரின் 21வது வசனம் மிகத் தெளிவாக அறிவிக்கின்றது:
'நீர் பார்க்கவில்லையா?. அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்.
அத்துடன் அருள்மறை குர்ஆனின் 23வது அத்தியாயம் ஸுரத்துல் முஃமினூனின் 18வது வசனம் மேலும் விபரமாக தெரிவிக்கின்றது:
'மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.'
பாப்;: நான் அறிந்தவரை முதன் முதலாக நீர்நிலைகளின் சுழ்ற்சியைப் பற்றிய விபரம் இவ்வுலகிற்கு அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டவர் (1580 ஆம் ஆண்டு) பெர்னார்ட் பலிஸி என்னும் அறிவியலறிஞர்தான்.
யூனுஸ்: தவிர அருள்மறை குர்ஆன் நட்சத்திரங்களுக்கும், இன்னபிற கோளங்களுக்கும் உள்ள வேற்றுமையை தௌ;ளத் தெளிவாக அறிவிக்கிறது. அருள்மறை குர்ஆனின் 86வது அத்தியாயம் ஸுரத்துத் தாரிக்கின் 1முதல் 3வரையிலான வசனங்கள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றது:
'வானத்தின் மீது சத்தியமாக! தாரிஃக் மீதும் சத்தியமாக. தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.'
அருள்மறை குர்ஆனின் 37வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஃப்ஃபாத்தின் 6வது வசனம் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கின்றது:
'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். '
பாப்: ம்;;;..!ம்..! அரபியர்கள் வானவியலில் வல்லுனர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஒருவேளை அரபி மூதாதையர்கள் தங்களது வானவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி; தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு தெரிவித்திருக்கலாம் இல்லையா?..
யூனுஸ்: அரபியர்கள் வானவியலில் வல்லுனர்கள் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தாங்கள் சம்பவங்களை தலைகீழாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.
பாப்: தாங்கள் என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள்?..!
யூனுஸ்: அரபியர்கள் வானவியலில் வல்லுனர்கள் ஆவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அருள்மறை குர்ஆன் அருளப்பட்டுவிட்டது என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அரபியர்கள் அருள்மறை குர்ஆனில் இருந்துதான் வானவியிலைக் கற்றுக் கொண்டு, வானவியல் வல்லுனர்களாக திகழ்ந்தார்களேத் தவிர, நிச்சயமாக தாங்கள் சொல்வது போல் அல்ல..! அருள்மறை குர்ஆனின் 30வது அத்தியாயம் ஸுரத்துர்ரூமின் 48வது வசனம் இவ்வாறு குறிப்பிடுகின்றது:
'அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி வானத்தில் பரத்தி பல துண்டங்களாகவும் ஆக்கிவிடுகிறான், அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர், ..! '
தவிர புவியியலில் 'சுருட்டுதல்' என்றால் என்னவென்று தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். சரியா?.
பாப்: ஆம்..! பூமி அசையாமல் நிலையாக இருப்பதற்காக மலைகள் உருவாக வேண்டி இயல்பாகவே பூமியின் மேலோடு மெல்லியதாக அமைந்திருக்கிறது என்பது அறிவியல் கூறும் செய்தி.
யூனுஸ்: இதுபற்றி அருள்மறை குர்ஆனின் 78வது அத்தியாயம் ஸுரத்துன் நபாவின் 6 மற்றும் 7வது வசனங்கள் நமக்கு குறிப்புகளைத் தருகின்றன:
'நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? '
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த வசனத்தில் உள்ள 'முளைகள்' என்ற வார்த்தை பூமியை அசையாமல் நிலை நிறுத்தியிருக்கிறது என்பதை நமக்குத் தெரிவிக்கின்றது. மேலும் பூமியை விரிப்பாக ஆக்கித் தந்திருக்கிறேன் என்கிற வசனம் மனிதர்கள் தடுமாறாமல் நடந்து செல்வதற்கு ஏதுவாக பூமியை ஆக்கியிருக்கிறான் என்பதையும் நமக்குத் தெரிவிக்கிறது.
மலைகளை முளைகளாக ஆக்கித் தரவில்லையா என்கிற வசனத்திற்கான காரணம் என்ன என்பதை அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 31வது வசனம் நமக்குத் தெளிவாக தெரிவிக்கின்றது:
இன்னும், இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்,
இந்த வசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் செய்தி என்னவெனில் பூமியை ஆடாமல் அசையாமல் நிலையாக வைத்திருக்கும் பணியை மலைகள் செய்கின்றன என்பதாகும். மேலும் பூமியின் வடிவம் மாறி, பூமியானது தன்னுடைய நிலையிலிருந்து மாறிவிடாமலிருக்கவும் மலைகள் காரணமாக அமைந்துள்ளன என்பதுமாகும்.
சுவையான நீரும், உப்பு நீரும் ஒன்றாக கலப்பதில்லை என்பதை அறிவியலறிஞர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?..
(இன்ஷா அல்லாஹ்.. உரையாடல் தொடரும்)

சுவையான நீரும், உப்பு நீரும் ஒன்றாக கலப்பதில்லை என்பதை அறிவியலறிஞர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள்
(இன்ஷா அல்லாஹ்.. உரையாடல் தொடரும்)
No comments:
Post a Comment