இஸ்லாமும் - அறிவியலும்
ஓர் கலந்துரையாடல்..!
(பாகம் - 2)
Coutesy: www.islamway.com
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்
யூனுஸ்: பூமியின் வடிவம் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?...
பாப்: 1607ஆம் ஆண்டு சர் பிரான்ஸிஸ் டிராகே (Sir Frances Drake) என்னும் அறிவியலறிஞர் பூமி உருண்டையானது என்று கண்டு பிடிக்கும் வரை, ஆதிகால மனிதன் பூமி தட்டையானது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் இன்று புநழனை என்கிற ஆங்கில வார்த்தை பூமி உருண்டை வடிவமானது என்று அறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
யூனுஸ்: அதிசயிக்கும் விதத்தில் அருள்மறை குர்ஆனின் 31வது அத்தியாயம் 29வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான், பகலை இரவில் புகுத்துகிறான்' (அத்தியாயம் 31 ஸுரத்துல் லுக்மான் - வசனம் 29).
இரவைப் பகலில் புகுத்துகிறான் என்கிற வார்த்தைகளும், பகலை இரவில் புகுத்துகிறான் என்ற வார்த்தைகளும் - பூமியானது உருண்டையானது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. மேலும் பூமி தட்டையானதாக இருந்தால் இரவும், பகலும் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை.
பாப்: ஆம்..!மேலும் சொல்லுங்கள்..!
யூனுஸ்: அல்லாஹ் அருள்மறை குர்ஆனின் 39வது அத்தியாயம் 5வது வசனத்தில் கூறுகிறான்:
'அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்: மேலும் இரவின் மீதும் பகலைச் சுற்றுகிறான்..!
சுற்றுகிறான் என்பதற்கு அருள்மறை குர்ஆளில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி வார்ததையானது 'கவ்வரா' என்பதாகும். மேற்படி வார்த்தைக்கு சுற்றுவது என்பதே சரியான பொருளாகும். சுற்றுவது என்கிற வினைச்சொல்லின் பொருள் வளையமாக சுற்றுவதை மாத்திரம் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுவதாகும். தாங்கள் கூறினீர்கள் பூமி உருண்டையானது என்பதை மிகச் சமீபத்தில்தான் கண்டுபிடித்தார்கள் என்று. மிகச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட அருள்மறை குர்ஆனில் யார் குறிப்பிட்டிருப்பார்கள்?
பாப்: எனக்கு புரியவில்லை. நான் புரிந்து கொள்ளும்படி இன்னும் தெளிவாகச் சொல்லுங்களேன்.!
யூனுஸ்: நல்லது. சுந்திரனின் ஒளி எங்கிருந்து வருகிறது என்பதைச் சொல்லுங்கள்?
பாப்: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சந்தின் - சூரியனைப் போன்ற ஒரு சிறிய படைப்பு என்றும், சந்திரனும், சூரியனும் தாமாகவே ஒளியைப் பிரதிபலிக்கின்றன என்றும் மக்கள் நம்பி வந்தனர். ஆனால் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பிரதிபலிக்கிறது என்பதை பறைசாற்றுகின்றன.
யூனுஸ்: வான( மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும், ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்'
என அருள்மறை குர்ஆனின் 25வது அத்தியாயம் ஸுரத்துல் புர்கானின் 61வது வசனம் கூறுகின்றது. மேற்படி குர்ஆனிய வசனத்தில் சூரியனானது ஒளிதரும் ஒரு விளக்கிற்கு ஒப்பிடப்படும் அதே வேளையில் சந்திரனானது சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாப்: அநேகமாக இது ஊகமாகவோ அல்லது கற்பனையாகவோ இருக்கலாம் இல்லையா?..
யூனுஸ்: நமது விவாதம் தொடர வேண்டும் என்ற காரணத்திற்காக நான் மேலும் தங்களோடு சர்ச்சை செய்ய விரும்பவில்லை. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சூரியன் அசையாத ஒரு கோளம் என்றும், மற்ற கோளங்கள் சூரியனின் அச்சில் சேர்ந்து சுழல்வதோடு - சூரியனையும் சுழற்றுகின்றன என எனது ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்..!
பாப்: அது போலத்தான் உங்களது குர்ஆனும் சொல்கிறதா?. ஹா..!
யூனுஸ்: இல்லை..! இல்லை..! அருள்மறை குர்ஆன் அவ்வாறு சொல்லவி;ல்லை. சூரியன் ஒரு அசையாத கோளம் என்று நான் கற்றுக் கொண்டது பள்ளிக் கூடத்தில்தான்..!
பாப்: இன்றைய அறிவியல் உலகம் மிகவும் முன்னேறிவிட்டது தெரியுமா?. சூரியன் தன்னைத் தானே சுற்றி வருகின்றது என்பதை பற்றி ஆய்ந்தறிந்து உள்ளது. நீங்கள் சூரியனைக் கவனித்துப் பார்த்தால் தெரியும். அதிலிருக்கும் 'கரும்புள்ளிகள்' ஒரு முறை தன்னைத் தானே சுற்றிவர 25 நாட்கள் ஆகின்றன எனும் அறிவியல் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.
யூனுஸ்: நல்லது..! இஸ்லாமியர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு அருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியாவின் 33வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது:
'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான், (வானில் தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
மேற்கண்ட வசனம் சூரியனும், சந்திரனும் சுழலுகின்றன என்பதற்கும், விண்ணுலக கோளங்கள் யாவும் ஒரு வட்டவரைக்குள் சுழன்றுவருகின்றன என்பதற்கும் ஆதாரமாக அமைந்துள்ளது. இப்போது சொல்லுங்கள்..! மிகச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மைகளை பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இறக்கியருள்ளபட்ட அருள்மறை குர்ஆனில் யார் குறிப்பிட்டிருக்க முடியும்?. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன்பு எனது இன்னொரு கேள்விக்கும் பதிலளியுங்கள். நட்சத்திரங்களுக்கும், கோளங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா?...
பாப்: ஆம். வித்தியாசம் இருக்கின்றது. மிகப்பெரிய கோளமான சூரியன் தனக்குத்தானே ஒளியை உண்டாக்கும் தன்மை கொண்டது என்றும், நாம் வாழும் பூமி போன்ற கோளங்கள் - தனக்குத்தானே வெளிச்சத்தை உண்டாக்கும் தன்மையைக் கொண்டவை அல்ல என்பதுமே நட்சத்திரங்களுக்கும் மற்றுமுள்ள கோளங்களுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்.
யூனுஸ்: அருள்மறை குர்ஆன் வானவியலைப் பற்றி மாத்திரம் சொல்லவில்லை. அருள்மறை குர்ஆனின் மேலும் பல வசனங்கள் நீர் நிலைகளைப் பற்றியும் தெரிவிக்கிறது.
பாப்: மேலே சொல்லுங்கள்..! நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
(இன்ஷா அல்லாஹ்.. உரையாடல் தொடரும்)

No comments:
Post a Comment