சிலந்தி - தமிழாக்கம்: எம். முஹம்மது மீராசாகிப். ( 1 )

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.

சிலந்தி - ஆங்கிலத்தில் ஹாரூன் யஹ்யா - தமிழாக்கம்: எம். முஹம்மது மீராசாகிப்.
 
சிலந்தி எனும் ஒரு சிறு படைப்பினத்தைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் எழுதப்பட்டதல்ல இந்த கட்டுரை. மாறாக ஒரு 'திறவுகோலாக' செயல்பட வேண்டும் என்பதே இக்கட்டுரைத் தொடரின் முக்கிய குறிக்கோளாகும். 'திறவுகோலாக' செயல்படப்போகும் இக்கட்டுரைத் தொடரின் பின்னணி பொருள், மனிதர்களில் பலர் தம் உலக வாழ்வில் கண்டுகொள்ளாத உன்னத உண்மைகளாகும். பரிணாமக் கொள்கை என்பது அடிப்படையே இல்லாதது என்பதை வெட்ட வெளிச்சமாக்குவது, உண்மையை அடியோடு மறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கொள்கைக்காக கொடி பிடிப்போருக்கு விளக்கமளிப்பது: உலகம் தோன்றிய நாள் முதல் மனித சிந்தனையில் உள்ள கேள்விக்கணைகள் பலவற்றிற்கு விடையளிப்பது ஆகியவையே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

முன்னுரை

சிலந்தி என்னும் சிறிய படைப்பினமே இக்கட்டுரையின் கரு. தங்களுக்கு சுவராஸ்யம் இல்லாத ஒரு சிறிய படைப்பினம் குறித்து இக்கட்டுரை விளக்கமளிக்கும் என சில வாசகர்கள் எண்ணியிருக்கலாம். இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்க்கைச் சூழலில் தங்களுக்கு எவ்வித பயனும் இல்லாத ஒரு சிறிய படைப்பினத்தைப் பற்றிய இந்த கட்டுரையை படிப்பதற்கென நேரம் ஒதுக்குவதே சிரமம் எனவும் கருதியிருக்கலாம்.

இதற்கு பதிலாக அரசியல் அல்லது பொருளாதாரம் பற்றி விளக்கமளிக்கும் ஒரு கட்டுரையோ, அல்லது ஒரு கற்பனை கதையோ எழுதியிருந்தால் மிகவும் 'பயனுள்ளதாக' இருந்திருக்குமே என்றும் சிந்தித்திருக்கலாம். ஆனால் வாசகர்கள் படித்துக்கொண்;டிருக்கும் இந்த கட்டுரை அவர்கள் எண்ணியதைவிட அல்லது கருதியதைவிட அதிக பயனுள்ளதாகும். அவர்கள் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் வித்தியாசமான கருத்துக்களை அள்ளித்தரும். சிலந்தி என்றழைக்கப்படும் ஒரு சிறிய படைப்பினத்தைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிவிக்கும் உயிரியல் கட்டுரை அல்ல இது. சிலந்தி என்னும் ஒரு சிறு படைப்பினம் இந்த கட்டுரையின் கருவாக இருந்தாலும், படைப்பியலின் உண்மைகளும், அவ்வுண்மைகள் தரும் படிப்பினைகளுமே இக்கட்டுரையின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாகும்.

இக்கட்டுரை தரும் கருத்து ஒரு திறவுகோலைப் போன்று. திறவுகோலை ஒரு உலோகப்பொருளாக மட்டுமே பார்ப்போம் எனில் அதன் முக்கியத்துவம் எவருக்கும் புரிவதில்லை. இதுவரை திறவுகோலையேப் பார்த்திராத ஒருவரின் கையில் ஒரு திறவுகோலைக் கொடுப்போம் எனில் பூட்டுக்கும் திறவுகோலுக்கும் வித்தியாசம் தெரியாத அவர், திறவுகோலை பயனற்ற ஒரு உலோகப் பொருளாகவே கருதுவார். ஆனால் சில வேளைகளில் அத்திறவுகோல் திறக்கப்போகும் பொக்கிஷத்தின் உள்ளிருக்கும் பொருளின் மதிப்பைப் பொறுத்தே, திறவுகோலின் மதிப்பும் கணக்கிடப்படும். பொக்கிஷத்தின் உள்ளிருக்கும் பொருள் உலகிலேயே அதிகம் மதிப்பு மிக்கதாக இருக்கலாம்.

சிலந்தி எனும் ஒரு சிறு படைப்பினத்தைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் எழுதப்பட்டதல்ல இந்த கட்டுரை. மாறாக ஒரு 'திறவுகோலாக' செயல்பட வேண்டும் என்பதே இக்கட்டுரைத் தொடரின் முக்கிய குறிக்கோளாகும். 'திறவுகோலாக' செயல்படப்போகும் இக்கட்டுரைத் தொடரின் பின்னணி பொருள், மனிதர்களில் பலர் தம் உலக வாழ்வில் கண்டுகொள்ளாத உன்னத உண்மைகளாகும். பரிணாமக் கொள்கை என்பது அடிப்படையே இல்லாதது என்பதை வெட்ட வெளிச்சமாக்குவது, உண்மையை அடியோடு மறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கொள்கைக்காக கொடி பிடிப்போருக்கு விளக்கமளிப்பது: உலகம் தோன்றிய நாள் முதல் மனித சிந்தனையில் உள்ள கேள்விக்கணைகள் பலவற்றிற்கு விடையளிப்பது ஆகியவையே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

நான் யார்? இப்பிரபஞ்சமும், நானும் எவ்வாறு படைக்கப்பட்டோம்? இவ்வுலக வாழ்க்கைக்கான அர்த்தமும் நோக்கமும் யாவை? என மனிதச் சிந்தனையில் உள்ள அடிப்படை கேள்விகளுக்கான பதிலே 'சிலந்தி' என்னும் 'இத்திறவுகோலின்' பின்னணியில் உள்ள மதிப்பு மிக்க பொருளாகும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

No comments:

Post a Comment