அறிவுக்கு ஓய்வளிக்காதே !

அறிவுக்கு ஓய்வளிக்காதே !


இரண்டு பேர் மரம் வெட்டுவதற்காகக் காட்டிற்குச் சென்றனர். அவர்களுக்குப் பிழைப்பு அதுதான். எவ்வளவு அதிகமாக மரம் வெட்டி வருகிறார்களோ அந்தளவிற்கு வருமானம் அதிகரிக்கும். அன்று மாலை திரும்புகிறபோது ஒருவன் அதிகமாகக் களைப்பு இல்லாமலும் காணப்பட்டான். ஆனால், குறைவாக மரம் வெட்டியவனோ அதிகக் களைப்போடு காணப்பட்டான். 

இவனுக்கு ஒரே குழப்பம்! எப்படி அவனால் களைப்படையாமல் அதிகளவில் மரத்தை வெட்ட முடிந்தது? 

இந்த சந்தேகத்தைக் கேட்டுவிட்டான்

'மரம் வெட்டும்போது அவ்வப்போது சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் களைப்படையாமல் இருக்கலாம்' என்றான்.

'இந்த ரகசியம் தெரியாமல் போயிற்றே' என்று எண்ணியவன், மறுநாள் அப்படியே அவ்வப்போது மரத்தடியில் ஓயவேடுத்துக்கொண்டே வெட்டினான்.

அன்று மாலை திரும்புகையில் நேற்றைவிட இன்னும் குறைவாகவே அவனால் மரத்தை வெட்ட முடிந்தது. ஆனால், மற்றவனோ நேற்றைப் போலவே அதிகமாக வெட்டியிருந்தான்

இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்று நினைத்தான். மறுநாள் காட்டிற்கு மரம் வெட்டச் சென்றவன், அன்று மரத்தை வெட்டாமல் மறைந்திருந்து மற்றவன் எவ்வாறு வெட்டுகிறான் என்று கவனித்தான் அப்போதுதான் தெரிந்தது உண்மை.

அதாவது மரத்தை வெட்டிவிட்டு அவ்வப்போது ஓயவேடுத்தவன் நடுநடுவே, சும்மா இருக்காமல் நிழலில் அமர்ந்தவாறு தன கோடாலியைத் தீட்டிக் கொண்டே இருந்தான்

உட்கருத்து:
ஓய்வு உடலுக்குக் கொடுத்தாலும் மூளைக்குக் கொடுக்கக்கூடாது. அதனை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருந்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.

No comments:

Post a Comment