இல்லங்களிலும் ஷைத்தானின் ஊசலாட்டம்.
நம்முடைய இல்லங்களை மையமாக வைத்தும் ஷைத்தான் நம்மை வழிகெடுத்து வருகிறான். அதிலி-ருந்து பாதுகாப்புத் தேடும் வழிமுறையையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கி விடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1430
வீடுகளை மையமாக வைத்து ஷைத்தான் எப்படி வழிகெடுக்கிறான்
என்பதை நம் சமுதாய மக்களின் நடவடிக்கைகளில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாகச் சொல்வதாக இருந்தால் வீடுகட்டும் போதோ அதற்குப் பிறகோ பூசணிக்காயில் கண், மூக்கு, வாய் என்று விருப்பம் போல் விகாரமாக மையினால் படம் வரைந்து தொங்க விடுகின்றனர். பழைய சட்டை பேண்டை எடுத்து அதற்குள் வைக்கோலைத் திணித்து விகாரமாக படம் வரைந்து தொங்க விடுகின்றனர். எலுமிச்சம் பழம், படிகாரக்கல், எண்ணெய் பாட்டிலை வீட்டின் மூலைமுடுக்குகளில் தொங்க விடுகின்றனர். வீட்டின் முன் பகுதியில் அல்லது நடுவீட்டில் சங்கு எனும் சிப்பியைப் பதிக்கிற முஸ்லிம்களும் இருக்கின்றனர்.
புது வீடு கட்டினால் தச்சு கழிக்கிறோம் என்ற பெயரில் இந்துமத பூஜையை நடத்தி இஸ்லாத்தை விட்டே வெளியேறும் செயலையும் செய்கின்றனர்.
இப்படியெல்லாம் ஷைத்தான் நம்மை வழிகெடுக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்குத் தான் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லித் தந்தபடி சூரத்துல் பகராவை தொழுகையின் மூலமாகவோ அல்லது தனியாகவோ தினமும் ஓதி ஷைத்தானிடமிருந்து நமது வீடுகளைப் பாதுகாப்போம்.
No comments:
Post a Comment