இஸ்லாமும் - அறிவியலும் ஓர் கலந்துரையாடல்..! (பாகம் - 1))

இஸ்லாமும் - அறிவியலும் ஓர் கலந்துரையாடல்..! (பாகம் - 1)
Courtesy: http://www.islamway.com/
தமிழாக்கம்: முஹம்மது மீராசாகிப்





அந்த விமானம் அமைதியாக பறந்து கொண்டிருந்தது. அருகருகே அமர்ந்திருந்த அந்த இரண்டு பயணிகளும் வௌ;வெறு உலகத்தைச் சார்ந்தவர்கள். விமான பயணத்தின் ஆரம்ப ஆயத்தங்கள் முடிவடைந்ததும், இரண்டு பயணிகளுக்கும் இடையிலான உரையாடல் துவங்கியது..!

பாப்: நான் கடவுள் இருக்கிறார் என்று நம்பவில்லை..! ஓரளவுக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை அறிவியல் மீது நம்பிக்கை உள்ள நான், அறிவியல் கூற்றுப்படி தொட்டு உணரக்கூடிய அல்லது பார்க்க ஏதுவாக கடவுள் இருக்கிறார் என்பதை தாங்கள் நீரூபித்தால், கடவுள் நம்பிக்கைபற்றி சிந்தனை செய்யலாம்.

யூனுஸ்: நன்று! நீங்கள் தொழில்துறை அறிவியல் தொடர்பு உடையவராக இருப்பதால் எனது இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இயந்திரம் அல்லது ஒரு பொருளைப்பற்றிய முழு விபரமும் அதாவது அது எவ்வாறு இயங்கும், எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பன போன்ற விபரங்கள் அனைத்தையும் - அறிந்தவர் யாராக இருக்க முடியும்?.

பாப்: அந்த இயந்திரத்தை யார் கண்டுபிடித்தரோ, அல்லது அந்த அந்த இயந்திரத்தை யார் தயாரித்தாரோ அவருக்குத்தான் அதனைப் பற்றிய முழு விபரமும் தெரிந்திருக்கும்.

யூனுஸ்: அப்படியெனில் பொருளை படைத்தவர், அல்லது அந்த பொருளை உருவாக்கியவர் மாத்திரமே அந்த பொருளை பற்றிய முழு விபரமும் அறிந்தவராக இருப்பார் என்று முடிவு செய்து கொள்ளலாமா?.

பாப்: நிச்சயமாக, அதுதான் சரியானதும் கூட..!

யூனுஸ்: இதுபற்றிய அறிவைப் பெற்றிருக்கும் காரணத்தால் - நான் உங்களை கேட்கவிருக்கும் அடுத்த கேள்வி இதுதான்: இந்த பரந்த உலகம் அல்லது இந்த அண்ட சராசரம் எப்படி உருவானது?

பாப்: மிகச் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளின்படி - இந்த முழு அண்ட சராசரமும் மிகப்பெரிய ஒன்றிணைந்த ஒரே கோளமாக இருந்தது என்றும், அதனை அறிவியலாளர்கள் விண்மீன்படலம் (நேடிரடய) என்றும் அழைக்கின்றார்கள். மேற்படி விண்மீன் படலம் வெடித்து சிதறியதன் காரணத்தால் நாம் வாழக் கூடிய இந்த பூமி, மற்றும் சூரியன், சந்திரன், ஏனைய நட்சத்திரங்கள் உட்பட கோள்கள் அனைத்தும் உருவாகின என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள்.

யூனுஸ்: அப்படியெனில், அதை தாங்கள் நம்புகிறீர்கள் அல்லவா?.

பாப்: ஆம்.! கண்டிப்பாக. ஏனெனில் அவைகள் யாவும் சரியானது என்று அறிவியல் ரீதியாக உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளன. மேற்படி கருத்து 1973 ஆம் ஆண்டு 'பெரும் வெடிப்பு விதி' (டீபை டீயபெ வுhநழசல) என்று அழைக்கப்படும் அறிவியல் கண்டுபிடிப்பு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

யூனுஸ்: ஒகோ! அப்படியெனில் நீங்கள் அதிசயத்தக்க விதத்தில் செய்தி ஒன்றினை தெரிவிக்கிறேன். அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயத்தின் 30வது வசனம் இவ்வாறு கூறுகின்றது,

'நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா?' (அத்தியாயம் 21 ஸுரத்துல் அன்பியா - வசனம்-30)

மேற்படி வசனத்தின் மூலம் அருள்மறை குர்ஆன் பெரும் வெடிப்பு விதியைப் பற்றிச் சொல்வதை நாம் அறியலாம். மேலும் இந்த இடத்தில் அருள்மறை குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பாக இறக்கியருளப்பட்டது என்கிற உண்மைச் செய்தியை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பாப்: நானும் குர்ஆனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதனைப் பற்றி மேலும் விபரங்களை எனக்குத் தெரிவிப்பீர்களா?..

யூனுஸ்: நிச்சயமாக..! முஸ்லிம்களாகிய நாங்கள் அனைவரும் குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் என்றும், அன்றுமுதல் இன்றுவரை குர்ஆன் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் உறுதியாக நம்புகின்றோம். அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வால், வசனங்களாக அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும் மலக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலம் இறக்கியருளப்பட்டது என்றும் உறுதியாக நம்புகின்றோம். அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (நபித்துவம் பெற்ற பின்பு) உயிருடன் வாழ்ந்திருந்த 23 வருடங்களில் சிறுகச் சிறுக இறக்கியருளப்பட்டது.

பாப்: குர்ஆன் 14நூற்றாண்டுகள் முன்பு இறக்கியருளப்பட்டது என்பதும், அதில் மாற்றமே செய்யப்படவில்லை என்பதும் உண்மைதானா?.

யூனுஸ்: நிச்சயமாக..! குர்ஆன் 14நூற்றாண்டுகளுக்கு முன்பு இறக்கியருளப்பட்டது என்பதும், அதில் மாற்றமே செய்யப்படவில்லை என்பதும் வரலாறு பூர்வமான உண்மை. 7ஆம் நூற்றாண்டில் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆன் அன்றுமுதல் இன்றுவரை மாற்றப்படவேயில்லை என்பதும் வரலாறு பூர்வமான உண்மை. வரலாற்று ஆசிரியர்கள், அவர்கள் இஸ்லாத்திற்கு ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி, அல்லது எதிர்ப்பாளர்களாக இருந்தாலும் இதனை நிச்சயமாக ஒப்புக்கொள்வார்கள்.

பாப்: ஆஹா அற்புதம்! நீங்கள் சொல்வது என்னை வியப்படையச் செய்கிறது..!

யூனுஸ்: பூமியின் வடிவம் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?...


(இன்ஷா அல்லாஹ்.. உரையாடல் தொடரும்)

No comments:

Post a Comment