குர்ஆனின் பல பிரதிகள் உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் உஸ்மான் (ரலி) அவர்களால்
எரிக்கப்பட்டது. குர்ஆன் இறைவனால் அருளப்பட்டதல்ல. மாறாக உஸ்மான் (ரலி) அவர்களால்
தொகுப்பட்ட பிரதிதானே தற்போதுள்ள குர்ஆன்?

டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்களிடம் இஸ்லாம் அல்லாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிய போதுமானவன் ( முகநூல் வழியாக முஹம்மது மீராசாகிப்)..



இஸ்லாத்தின் மூன்றாவது கலிபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் ஒன்றுக் கொன்று முரண்பட்ட
பல குர்ஆனின் பிரதிகளை தொகுத்து ஒரே குர்ஆனாக உருவாக்கப் பட்டதுதான் இன்றைய அருள்மறை
என்பது, குர்ஆனை பற்றி உலவுகின்ற கட்டுக்கதைகளில் ஒன்று. எந்த அருள்மறை முஹம்மது நபி
(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதோ அதே அருள்மறைதான், இஸ்லாமிய
உலகத்தினரால் பெரிதும் போற்றி மதிக்கப்படும் அல்லாஹ்வின் வேதமாக இன்றும் இவ்வுலகில்
திகழ்கின்றது. இன்றைக்கு இருக்கும் அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி
(ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட ஒன்று. கட்டுக்கதைக்கான ஆணிவேர் எது
என்று நாம் இப்போது ஆய்வு செய்வோம்.

1. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ்
தொகுக்கப்பட்டு, அவர்களால் சரிபார்க்கவும் பட்டதுதான் இன்றைக்கு நம்மிடையே எழுத்து
வடிவில் இருக்கும் அருள்மறை குர்ஆன்.

அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அல்லாஹ்வால் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு
இறக்கியருளப்பட்டவுடன், அதனை அவர்கள் மனனம் செய்து கொள்வார்கள். பின்னர்
இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்கள் அனைவருக்கும் தெரிவித்து, தனது
தோழர்களையும் மனனம் செய்து கொள்ளச் செய்வார்கள். அத்துடன் அல்லாஹ்வால்
இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களை தனது தோழர்களை கொண்டு எழுதிக்கொள்ளவும்
செய்வார்கள். எழுதிக்கொண்ட வசனங்களை சரியானதுதானா என்று மீண்டும் பலமுறை உறுதி செய்து
கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ருஅஅi) எழுதவும், படிக்கவும்
தெரியாதவர்கள். எனவேதான் இறைவனால் அருள்மறை வசனங்கள் இறக்கியருளப்பட்டதும் - அந்த
வசனங்களை தனது தோழர்களுக்கு தெரிவிப்பார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களும்
நபிகளால் தெரிவிக்கப்பட்ட இறைமறை வசனங்களை எழுதிவைத்துக் கொள்வார்கள். தம்
தோழர்களால் எழுதிவைக்கப்பட்ட வசனங்களை மீண்டும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - தம்
தோழர்களை வாசிக்கக் சொல்லி கேட்டு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள்.
அவ்வாறு எழுதப்பட்டதில் தவறுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனயடியாக திருத்தி எழுதச்
சொல்லி - அந்த தவறுகளையும் திருத்திக் கொள்வார்கள். அதேபோன்று தம் தோழர்களால் மனனம்
செய்யப்பட்ட வசனங்களும் - தம் தோழர்களால் எழுதப்பட்ட வசனங்களும் சரியானது தானா என்பதை
- மேற்படி வசனங்களை மனனம் செய்த தம் தோழர்களை ஓதச் சொல்லி அதனைiயும் உறுதி செய்து
கொள்வார்கள். இவ்வாறாக அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நேரடி
கண்காணிப்பின் கீழ் அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அருள்மறை குர்ஆனாக தொகுக்கப்பட்டது.

2. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் வசனங்களும், அல்லாஹ்வால்
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.

அருள்மறை குர்ஆன் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருபத்து இரண்டரை ஆண்டு காலங்களில்
அவசியம் ஏற்படும் போதெல்லாம் சிறிது, சிறிதாக இறக்கியருளப்பட்டது. குர்ஆனிய வசனங்கள் அது
இறக்கியருளப்பட்ட கால வரிசைப்படி (ஊhசழழெடழபiஉயட) தொகுக்கப்படவில்லை. அருள்மறை குர்ஆனின் அத்தியாயங்களும் அந்த அத்தியாயங்களுக்கு உண்டான வசனங்களும் அல்லாஹ்வால் - வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்ட குர்ஆனிய வசனங்களை எப்போதெல்லாம் நபி (ஸல்) அவர்கள்
தனது தோழர்களுக்கு அறவிக்கிறார்களோ, அப்போதெல்லாம் அந்த குர்ஆனிய வசனம் எந்த
அத்தியாயத்தைச் சார்ந்தது, அந்த அத்தியாயத்தின் எந்த வசனத்திற்கு அடுத்துள்ள வசனம்
என்பதையெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு அறிவிப்பார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வருடத்தின் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும், அந்த வருடம் முழுவதும் இறக்கியருளப்பட்ட வசனங்களை வானவர் கோமான் - ஜிப்ரில் (அலை) அவர்களிடம் - வசனங்களின் வரிசைக்கிரமங்களையும், சரியான வசனங்கள் தானா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த கடைசி ஆண்டில் அருள்மறை குர்ஆன் முழுவதும் சரியானதுதானா என்று இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட முறைகள் மூலம் அண்ணல் நபி (ஸல்) உயிரோடிருந்த காலத்திலேயே - அருள்மறை
குர்ஆனின் எழுத்து வடிவமும்- அருள்மறை குர்ஆனை மனனம் செய்த தோழர்களின் மனப்பாட வடிவமும் - நபிகளாரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சரிபார்க்கப்பட்டு - தொகுக்கவும் பட்டது என்பதற்கு மேற்கண்ட விளக்கங்கள் சான்றாக அமைந்துள்ளன.

3. அருள்மறை குர்ஆன் ஒரு பொதுவான வடிவில் பிரதியெடுக்கப்பட்டது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் அதன் சரியான
வரிசைக் கிரமப்படி இருந்தது. ஆனால் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் துண்டு துண்டான
தோல்களிலும், தட்டையான கல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், பேரீத்த மரத்தின் கிளைகளிலும், மற்றுமுள்ள மரக் கிளைகிலும் தனித்தனியாக எழுதப்பட்டிருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்றுக் கொண்ட முதல் கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்கள், பல பொருட்களிலும் தனித்தனியாக எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை, ஒரே இடத்தில் இருக்கும்படியாக தாள் (Paper) போன்ற ஒரு பொதுவான பொருளில் - எழுதும்படி பணித்தார்கள். அவ்வாறு பல பொருட்களில் எழுதப்பட்டு இருந்த அருள்மறை குர்ஆனின் வசனங்களை தாள் போன்ற பொருளில் எழுதி - அருள்மறை குர்ஆனின் மொத்தத் தொகுப்புகள் எதுவும் - சிதறிப்போய் விடக்கூடாது என்பதற்காக அதனைப் பாதுகாப்பாக வைத்தார்கள்.

4. உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரே பொருளில் தொகுத்து எழுதப்பட்டிருந்த அருள்மறை குர்ஆனை
பிரதி எடுக்கும் பணியை மேற்கொண்டார்கள்.

அருள்மறை குர்ஆனின் வசனங்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் நாவால் மொழியும்
போதெல்லாம், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அதனை தாமாகவே எழுதி வைத்துக்
கொள்வார்கள். அவ்வாறு தோழர்களால் எழுதி வைக்கப்பட்ட வசனங்களில் நபி (ஸல்) அவர்களால்
சரிபார்க்கப்படாத வசனங்களும் உண்டு. அவ்வாறு நபி (ஸல்) அவர்களால் சரிபார்க்கப்படாத
வசனங்களில் தவறுகள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம். தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
சொன்ன அருள்மறை வசனங்கள் எல்லாவற்றையும் - எல்லா நபித்தோழர்களும் நேரடியாக கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. ஆதலால் சில நபித் தோழர்கள் - சில வசனங்களை தவற விடக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கலாம் என்பன போன்ற விவாதங்கள், இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்த இஸ்லாமியர்களிடையே உருவானது.

மேற்படி விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பிய உஸ்மான் (ரலி) அவர்கள், அண்ணல் நபி
(ஸல்) அவர்களால் சரிபார்க்கப்பட்ட அருள்மறை குர்ஆனை, அப்போது உயிரோடிருந்த அண்ணல் நபி
(ஸல்) அவர்களின் அன்பு மனைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள்.
பெற்றுக் கொண்ட அருள்மறை குர்ஆனை - நபி (ஸல்) அவர்கள் குர்ஆனிய வசனங்கள் அருளப்பட்ட
பொதெல்லாம் தம் தோழர்களுக்கு சொல்லும் பொழுது - அதனை எழுதி வைத்துக் கொண்ட
தோழர்களில் நான்கு பேரை தேர்வு செய்து - தேர்வு செய்யப்பட்டவர்களில் ஸைய்த் பின் தாபித் (ரலி)
அவர்களின் தலைமையில் அருள்மறை குர்ஆனை இன்னும் சிறந்த முறையில் பிரதியெடுக்கச்
செய்தார்கள். அவ்வாறு பிரதியெடுக்கப்பட்ட அருள்மறை குர்ஆன் உஸ்மான் (ரலி) அவர்களால்
இஸ்லாமிய மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தவிர அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தங்களிடம் சிலர்
அருள்மறை குர்ஆனின் வசனங்களை வைத்திருந்தார்கள். அவ்வாறு வைத்திருந்த வசனங்களில் சில
முற்றிலும் பூர்த்தியாகத வசனங்களும் - எழுத்துப்பிழையுள்ள வசனங்களும் இருக்கலாம். இதன்
காரணத்தால் உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில்
தொகுக்கப்படாத வசனங்கள் எதுவும் மக்களிடம் இருந்தால், அதனை அழித்துவிடும்படி மக்களுக்கு
வேண்டுகோள் விடுத்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில்
தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனின் பிரதிகள் இரண்டு இப்போதும் பல நாடுகளாக சிதறுண்டு போன
ரஷ்யாவின் தலைநகர் தாஷ்கண்டில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கி நாட்டின் தலைநகர்
இஸ்தான்புல்லில் உள்ள அருங்காட்சியகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

5. அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி அரபி மொழி அல்லாதவர்களுக்காக
பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்பட்டது.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறை குர்ஆனில் - அரபி மொழி அல்லாதவர்களும் - அரபி மொழியை சரியான முறையில் உச்சரிக்க வேண்டி - பிரித்தறியக் கூடிய குறியீடுகள் சேர்க்கப்படாமல் இருந்தது. இக்குறியீடுகளை - ஃபத்ஆ - தம்மா - கஸ்ரா என்று அரபி மொழியிலும், ஸபர் - ஸேர் - பேஷ் என்று உருது மொழியிலும் அழைப்பார்கள். அரபி மொழி அரபியர்களின் தாய்மொழி என்பதால் - அருள்மறை குர்ஆனின் வசனங்களை சரியான முறையில்உச்சரித்து ஓதுவதற்கு - அரபியர்களுக்கு மேற்படி குறியீடுகள் தேவையில்லை. ஆனால் அரபிமொழியைத் தாய் மொழியாக கொண்டிராதவர்களுக்கு - குர்ஆனின் வசனங்களை சரிவர ஓத
வேண்டுமெனில் மேற்படி குறியீடுகள் அவசியம். மேற்படி குறியீடுகள் ஹிஜ்ரி 66-86 வரை (கி;. பி. 685
முதல் 705 வரை) ஆட்சி புரிந்த - உமையாத் - காலத்தின் ஐந்தாவது கலீஃபா - மாலிக் அர்-ரஹ்மான்
என்பவரால் அல்-ஹஜ்ஜாஜ் என்பவர் ஈராக்கில் கவர்னராக இருந்த காலத்தில் அருள்மறை குர்ஆனில்
இணைக்கப்பட்டது.

தற்போது நம்மிடையே இருக்கும் அருள்மறை பிரித்தறியக் கூடிய குறியீடுகளை கொண்டிருக்கிறது.
ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட அருள்மறையில்
இவ்வாறான குறியீடுகள் இல்லை என்ற காரணத்தால் குர்ஆனில் வேறுபாடுகள் இருக்கின்றது என்று
சிலர் வாதிடலாம். அவ்வாறு வாதிடுவோர்கள் 'குர்ஆன், என்ற வார்த்தைக்கு ' ஓதுதல் என்ற
பொருள் உண்டு என்பதை அறியாதவர்கள். எனவே குர்ஆனை அதன் வசனங்களின் உச்சரிப்பு மாறாமல்
ஓதுவதுதான் இங்கு முக்கியமேத் தவிர, எழுத்துக்களோ அல்லது பிரித்தறியக் கூடிய குறியீடுகளோ
அல்ல. அரபி வார்த்தைகளின் உச்சரிப்பு சரியானதாக இருக்கும் பட்சத்தில், அதன் அர்த்தங்களும்
சரியானதாகத்தான் இருக்கும்.

6. அருள்மறை குர்ஆனை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்:

அருள்மறை குர்ஆனின் பதினைந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹிஜ்ரின் ஒன்பதாவது வசனத்தில்
அல்லாஹ் அருள்மறை குர்ஆனை அவனே பாதுகாப்பதாக கூறுகின்றான்:
'நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்.
நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கிறோம்.' (அத்தியாயம் 15 ஸூரத்துல்
ஹிஜ்ர் 9வது வசனம்).                                                          

No comments:

Post a Comment