புகை மனிதனுக்குப் பகை..!
(சௌக்கத் அலி, யமாமா கேம்;ப், தம்மாம், சவுதி அரேபியா)
(கணிணி ஆக்கம்: முஹம்மது மீராசாகிப்)
நன்றி சகோதரர் முஹமது மீரான் சாஹிப்
ஆதி நபி ஆதம் (அலை) அவர்கள முதல் அவர்களின் சந்ததியினர் அனைவரையும் பயபக்தியுடையவர்களாக உருவாக்குவதற்காக வேண்டி இறைவனருளிய பயிற்சிப் பாசறை இறையச்சம்.
ஒருவர் இறையச்சத்தினால் இறை கட்டளைக்கு அடிபணிந்து இறைவன் விதித்த கடமைகள் அனைத்தையும் ஏற்று நடத்துகிறார் எனில், அவர் ஒரு சிறந்த பயபக்தியுடையவராக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் ஏவிய கட்டளைகளை ஏற்று நடப்பதும், விலக்கிய விலக்கல்களை தவிர்ந்து நடப்பதும் பயபக்தியுடையோரின் அடையாளமாகும்.
இந்த பயபக்தியனாது நம் வாழ்வின் எல்லா வேளைகளிலும், எல்லா நிலைகளிலும் எல்லா நாட்களிலும், ஏன் நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் பிரதிபலிக்க வேண்டும். ஏனெனில் நம் வாழ்வின் எந்த ஒரு வினாடியும் நாம் இறைவனின் கண்காணிப்பில் இல்லாமல் இல்லை.
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்கள்தாம் பயபக்தியுடையோர் ஆவார்கள் என்பதை அருள்மறை குர்ஆன் குறிப்பிடும் கீழ்கண்ட வசனத்தின் மூலமாக அறியலாம்.
'வேதத்தையுடையவர்களில் (நேர்வழியில்) நிற்கும் ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவுக் காலங்களில் சிரம் பணிந்தவர்களாக அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதுகின்றனர். அல்லாஹ்வையும், இறுதிநாளையும் அவர்கள் விசுவாசிக்கின்றனர். இன்னும், நன்மையைக் கொண்டும் ஏவுகின்றனர். தீமையை விட்டும் தடுக்கின்றனர். இன்னும், நன்மையானவற்றில் விரைகின்றனர். மேலும், இவர்கள் நல்லோர்களில் உள்ளோராவார். இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதும் அதை மறுக்க மாட்டார்கள். (இத்தகைய) பயபக்கியுடையோரை அல்லாஹ் நன்கறிவான்.' (அத்தியாயம்: 3 (ஸூரத்துல் ஆல-இம்ரான்) 113 முதல் 115வது வசனம் வரை).
எனவே இறையச்சத்தின் மூலம் சிறந்த ஒரு பயக்தியாளராக நாம் மாறி விட்டோம் என்பதின் வெளிப்பாடாக நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவர்களாக ஆகி விட வேண்டும்.
'என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது' (அத்தியாயம்: 7 (ஸூரத்துல் அஃராஃப்) 156ம் வசனத்தின் ஒரு பகுதி) என்று கூறும் இறைவன், இந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், 'அவர்கள் உம்மி நபியாகிய இந்த தூதரைப் பின்பற்றுவார்கள். (ஏனெனில்) இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார். தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார்'(அத்தியாயம:; 7 (ஸூரத்துல் அஃராஃப்) 157வது வசனத்தின் ஒரு பகுதி) என இறைவன் கூறுகிறான்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கவும். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்வின் தண்டனை உங்களை வந்தடையக் கூடும். பின்னர் நீங்கள் அவனை அழைத்தாலும் அவன் உங்களுக்கு விடையளிக்க மாட்டான்' (ஆதார நூல்: அஹ்மத்).
நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கின்ற சிறப்பான பணி வீணடிக்கப்படுவதும், உதாசீனம் செய்யப்படுவதும், நமது பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதற்கும், இறை உதவியில்லாமல் போவதற்கும் உரிய காரணிகளாகும். இப்பெரும் கடமையினை விட்டதன் காரணமாக இஸ்லாமியர்கள் இழிவு படுத்தப்படுவதும், தமக்குள் பிளவுண்டு சிதறிப்போயிருப்பதும், விரோதிகள் நம்மை அடர்ந்தேறுவதும், நம்முடைய பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாமல் மறுதலிக்கப்படுவதும் சர்வ சாதாரண நிகழ்வுகளாக கண்டு வருகிறோம். அல்லாஹ் இந்நிலையிலிருந்து நம்மை பாதுகாத்தருள்வானாகவும்.
அல்லாஹ் ஒருவனுக்காக வேண்டி அவனது கட்டளைப்படி நம் இச்சைகளையும், ஆசைகளையும் அடக்கி அவன் ஏவியபடி பரிபூரணமாக அவனது கட்டளைகளை நிறைவேற்றும் அவனது அருளை அடைய தகுதி பெற்ற நம்மில் பலர், சில வேளைகளில் சில பயனற்ற காரியங்களைச் செய்ய முனைகின்றனர்.
'உண்ணுங்கள்! பருகுங்கள்! ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை' (அத்தியாயம்;: 7 (ஸூரத்துல் அஃராஃப்) 31வது வசனத்தின் ஒருபகுதி)
எனவே ஒரு சிறந்த உண்மையான பயபக்தியுடையவராக வேண்டுமெனில் அல்லாஹ் விரும்பாத வீண் விரயங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், நம்மில் பலர் புகைத்தல் என்ற வீண் விரயம் செய்;யும் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். வீண் விரயம் செய்;வதால் தன் ஆரோக்கியத்தைக் கெடுப்பதுடன், சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றார்கள்.
ஜகாத், தர்மம் போன்ற நற்செயல்கள் மூலம் நலிந்த சமுதாய மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நம் மக்கள் ''வீண்விரயம் செய்யாதீர்கள்' என்ற இறைக்கட்டளையை கருத்தில் கொள்ளாமல் தமக்கும், தம்மைச் சார்ந்தவர்களுக்கும், இறைவன் அருளிய தூய்மையான சுற்றுப்புறச் சூழலுக்கும், சமூகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் கேடு விளைவிப்பதன் மூலம் பயபக்தியுடையோர் என்ற வரிசையில் தங்களை இணைத்துக் கொள்ள முடியுமா?
'புகைத்தல்' இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயல். இவ்வாறு இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வீண்விரயமான இந்த காரியத்தை நம் மக்கள் செய்வதன் மூலம் இறைவனின் நேசத்தை இழக்கிறார்கள். தங்கள் ஆரோக்கியத்தைத் தாங்களாகவே அழித்துக் கொள்கிறார்கள். தம்முடன் இருக்கும் சக சகோதரர்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். இதனால் பொருளாதார நஷ்டத்திற்கு உள்ளாவதோடு, சுற்றுப்புறச்சூழல் மற்றும் சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
ஒரு பகுதியில் வாழக்கூடியவர்கள் மாத்திரம் ஆண்டொன்றிற்கு பதினெட்டு இலட்சம் ரியால்களை (சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள்) புகைத்து சாம்பலாக்கி விடுகிறார்கள்.
உதாரணத்திற்கு ஒரு குடியிருப்புப் பகுதியில் ஆயிரம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் எனில் இவர்களில் ஒருவர் நாளொன்றுக்கு ஐந்து ரியால் வீதம் வருடத்திற்கு 1800 ரியால்களை புகைத்து சாம்பலாக்குகிறார். இவ்வாறு ஆயிரம் பேர் சேர்ந்து வருடம் ஒன்றிற்கு பதினெட்டு லட்சம் ரியால்களை (சுமார் ஐந்து இலட்சம் அமெரிக்க டாலர்கள்) புகைத்து சாம்பலாக்குகிறார்கள். மேற்படி கணக்கு ஒரு நகரத்தின் ஒரு குடியிருப்பு பகுதிக்கு மாத்திரம்தான். இதனையே, ஒரு வட்டம், மாவட்டம், மாநிலம், தேசம் என கணக்கிட்டால் வரம்புமீறி எவ்வளவு பெரும்தொகை வீண்விரயம் செய்யப்படுகின்றது என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம். வரம்பு மீறுவோரையும், வீண்விரயம் செய்வோரையும் அல்லாஹ் விரும்பமாட்டான். இவ்வாறு வீண்விரயம் செய்வோராகவும், வரம்பு மீறுவோராகவும் நம் மக்கள் இருப்பின் ஒரு சிறந்த உண்மையான பயபக்தியுடையவர்களாக மாறுவது எங்ஙனம்?
அல்லாஹ் அருள்மறையிலே கூறுகின்றான்:
'ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்' (அத்தியாயம்: 5 (ஸூரத்துல் மாயிதா) 90வதுவசனம்).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
'நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்;லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்: எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?' (அத்தியாயம்: 5 (ஸூரத்துல் மாயிதா) - 91வதுவசனம்).
புகைப்பது, புகைப்பொருட்களை தயாரிப்பது, விற்பது, அதனை பரிமாறுவது என புகை சம்பந்தப்பட்ட அனைத்துமே 'ஹராம்' என பல மார்க்க அறிஞர்கள் தங்களது ஒருமித்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
உலகில்; எய்ட்ஸ் என்னும் உயிர்கொல்லிநோய், போர் மற்றும் விபத்தினால் மரணிப்பவர்களைவிட புகைபிடிப்பதால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு ஆண்டில் புகைப்பதால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சத்தையும் தாண்டுகிறது.
சகோதரர்களே! நீங்கள் உங்கள் நலனுக்கு நல்லதைத் தேர்ந்தெடுப்பீர்களா? அல்லது கெட்டதைத் தேர்ந்தெடுப்பீர்களா?
இறைவன் விதித்த கடமைகளில் ஒன்றாகிய நோன்புடைய காலங்களில் இறைவனின் கட்டளைக்குச் சிரம் பணிந்து கலப்பற்ற தூய எண்ணத்துடன் பகல் முழுவதும் புகைப்பிடித்தலை தவிர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்ற அருமைச் சகோதரர்களே! தயவு செய்து சிந்தியுங்கள்! நோன்பு இல்லாத காலங்களில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது முறையா? இல்லை சரியா?
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையைப் படிக்கும் இந்த நேரத்திலிருந்து புகைப்பிடிக்கும் கெட்டப் பழக்கத்தை விட்டொழிப்போம் என்று உறுதி கொள்ளுங்கள். அத்தோடு புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள நம் சகோதரர்கள் நண்பர்கள் அனைவரையும் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து திருத்துவோம் என்றும் உறுதி கொள்ளுங்கள்.
இறைவனின் நேசத்தைப் பெறுவதிலிருந்தும் தடையாக இருக்கும் இதுபோன்ற வீண்விரயமான செலவினங்களை, இறை திருப்தியைப் பெற்றுத் தரும் அனாதைகளைப் பராமரித்தல், பள்ளிவாயில்கள் கட்டுதல் இன்னும் இதுபோன்ற இன்னபிற காரியங்களுக்கு பயன்படுத்துவோம் என்ற நல்லெண்ணம் கொள்ளுங்கள். இவ்வாறு இறைவன் ஏவிய காரியங்களை செய்வதிலும், விலக்கிய காரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதிலும் ஒருவொருக்கொருவர் போட்டியிட்டு நன்மையான காரியங்களை செய்வதில் முந்திக் கொள்வோமாக!
இறை கட்டளையை ஏற்று நடப்பதால் ஏற்படும் நன்மைகளையும், இறை கட்டளைக்கு மாறு செய்வதால் ஏற்படும் சோதனைகளையும் படிப்பினையாகக் கொண்டு நம்மை நேர்வழியின்பால் வழிகாட்டும் இறைவேதத்தை முழுமையாக உணர்ந்து பின்பற்ற முயலுவதே பயபக்தியுடையோரின் பண்பாகும்.
இறைவன் நமது இறையச்சத்தின் மூலம் நம் அனைவரையும் சிறந்த பயபக்தியாளர்களாக மாற்றி ஈருலக நன்மைகளும் கிடைக்க பேரருள் புரிவானாக!
(சௌக்கத் அலி, யமாமா கேம்;ப், தம்மாம், சவுதி அரேபியா)
(கணிணி ஆக்கம்: முஹம்மது மீராசாகிப்)
ஆதி நபி ஆதம் (அலை) அவர்கள முதல் அவர்களின் சந்ததியினர் அனைவரையும் பயபக்தியுடையவர்களாக உருவாக்குவதற்காக வேண்டி இறைவனருளிய பயிற்சிப் பாசறை இறையச்சம்.
ஒருவர் இறையச்சத்தினால் இறை கட்டளைக்கு அடிபணிந்து இறைவன் விதித்த கடமைகள் அனைத்தையும் ஏற்று நடத்துகிறார் எனில், அவர் ஒரு சிறந்த பயபக்தியுடையவராக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களும் ஏவிய கட்டளைகளை ஏற்று நடப்பதும், விலக்கிய விலக்கல்களை தவிர்ந்து நடப்பதும் பயபக்தியுடையோரின் அடையாளமாகும்.
இந்த பயபக்தியனாது நம் வாழ்வின் எல்லா வேளைகளிலும், எல்லா நிலைகளிலும் எல்லா நாட்களிலும், ஏன் நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியிலும் பிரதிபலிக்க வேண்டும். ஏனெனில் நம் வாழ்வின் எந்த ஒரு வினாடியும் நாம் இறைவனின் கண்காணிப்பில் இல்லாமல் இல்லை.
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்கள்தாம் பயபக்தியுடையோர் ஆவார்கள் என்பதை அருள்மறை குர்ஆன் குறிப்பிடும் கீழ்கண்ட வசனத்தின் மூலமாக அறியலாம்.
'வேதத்தையுடையவர்களில் (நேர்வழியில்) நிற்கும் ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவுக் காலங்களில் சிரம் பணிந்தவர்களாக அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதுகின்றனர். அல்லாஹ்வையும், இறுதிநாளையும் அவர்கள் விசுவாசிக்கின்றனர். இன்னும், நன்மையைக் கொண்டும் ஏவுகின்றனர். தீமையை விட்டும் தடுக்கின்றனர். இன்னும், நன்மையானவற்றில் விரைகின்றனர். மேலும், இவர்கள் நல்லோர்களில் உள்ளோராவார். இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதும் அதை மறுக்க மாட்டார்கள். (இத்தகைய) பயபக்கியுடையோரை அல்லாஹ் நன்கறிவான்.' (அத்தியாயம்: 3 (ஸூரத்துல் ஆல-இம்ரான்) 113 முதல் 115வது வசனம் வரை).
எனவே இறையச்சத்தின் மூலம் சிறந்த ஒரு பயக்தியாளராக நாம் மாறி விட்டோம் என்பதின் வெளிப்பாடாக நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவர்களாக ஆகி விட வேண்டும்.
'என்னுடைய அருள் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது' (அத்தியாயம்: 7 (ஸூரத்துல் அஃராஃப்) 156ம் வசனத்தின் ஒரு பகுதி) என்று கூறும் இறைவன், இந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், 'அவர்கள் உம்மி நபியாகிய இந்த தூதரைப் பின்பற்றுவார்கள். (ஏனெனில்) இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார். தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார்'(அத்தியாயம:;
மேலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'எனது உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கவும். அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்வின் தண்டனை உங்களை வந்தடையக் கூடும். பின்னர் நீங்கள் அவனை அழைத்தாலும் அவன் உங்களுக்கு விடையளிக்க மாட்டான்' (ஆதார நூல்: அஹ்மத்).
நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கின்ற சிறப்பான பணி வீணடிக்கப்படுவதும், உதாசீனம் செய்யப்படுவதும், நமது பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதற்கும், இறை உதவியில்லாமல் போவதற்கும் உரிய காரணிகளாகும். இப்பெரும் கடமையினை விட்டதன் காரணமாக இஸ்லாமியர்கள் இழிவு படுத்தப்படுவதும், தமக்குள் பிளவுண்டு சிதறிப்போயிருப்பதும், விரோதிகள் நம்மை அடர்ந்தேறுவதும், நம்முடைய பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாமல் மறுதலிக்கப்படுவதும் சர்வ சாதாரண நிகழ்வுகளாக கண்டு வருகிறோம். அல்லாஹ் இந்நிலையிலிருந்து நம்மை பாதுகாத்தருள்வானாகவும்.
அல்லாஹ் ஒருவனுக்காக வேண்டி அவனது கட்டளைப்படி நம் இச்சைகளையும், ஆசைகளையும் அடக்கி அவன் ஏவியபடி பரிபூரணமாக அவனது கட்டளைகளை நிறைவேற்றும் அவனது அருளை அடைய தகுதி பெற்ற நம்மில் பலர், சில வேளைகளில் சில பயனற்ற காரியங்களைச் செய்ய முனைகின்றனர்.
'உண்ணுங்கள்! பருகுங்கள்! ஆனால் வீண்விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை' (அத்தியாயம்;: 7 (ஸூரத்துல் அஃராஃப்) 31வது வசனத்தின் ஒருபகுதி)
எனவே ஒரு சிறந்த உண்மையான பயபக்தியுடையவராக வேண்டுமெனில் அல்லாஹ் விரும்பாத வீண் விரயங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், நம்மில் பலர் புகைத்தல் என்ற வீண் விரயம் செய்;யும் காரியத்தில் ஈடுபடுகிறார்கள். வீண் விரயம் செய்;வதால் தன் ஆரோக்கியத்தைக் கெடுப்பதுடன், சமுதாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றார்கள்.
ஜகாத், தர்மம் போன்ற நற்செயல்கள் மூலம் நலிந்த சமுதாய மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய நம் மக்கள் ''வீண்விரயம் செய்யாதீர்கள்' என்ற இறைக்கட்டளையை கருத்தில் கொள்ளாமல் தமக்கும், தம்மைச் சார்ந்தவர்களுக்கும், இறைவன் அருளிய தூய்மையான சுற்றுப்புறச் சூழலுக்கும், சமூகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் கேடு விளைவிப்பதன் மூலம் பயபக்தியுடையோர் என்ற வரிசையில் தங்களை இணைத்துக் கொள்ள முடியுமா?
'புகைத்தல்' இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒரு செயல். இவ்வாறு இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட வீண்விரயமான இந்த காரியத்தை நம் மக்கள் செய்வதன் மூலம் இறைவனின் நேசத்தை இழக்கிறார்கள். தங்கள் ஆரோக்கியத்தைத் தாங்களாகவே அழித்துக் கொள்கிறார்கள். தம்முடன் இருக்கும் சக சகோதரர்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள். இதனால் பொருளாதார நஷ்டத்திற்கு உள்ளாவதோடு, சுற்றுப்புறச்சூழல் மற்றும் சமுதாயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
ஒரு பகுதியில் வாழக்கூடியவர்கள் மாத்திரம் ஆண்டொன்றிற்கு பதினெட்டு இலட்சம் ரியால்களை (சுமார் ஐந்து லட்சம் அமெரிக்க டாலர்கள்) புகைத்து சாம்பலாக்கி விடுகிறார்கள்.
உதாரணத்திற்கு ஒரு குடியிருப்புப் பகுதியில் ஆயிரம் பேர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் எனில் இவர்களில் ஒருவர் நாளொன்றுக்கு ஐந்து ரியால் வீதம் வருடத்திற்கு 1800 ரியால்களை புகைத்து சாம்பலாக்குகிறார். இவ்வாறு ஆயிரம் பேர் சேர்ந்து வருடம் ஒன்றிற்கு பதினெட்டு லட்சம் ரியால்களை (சுமார் ஐந்து இலட்சம் அமெரிக்க டாலர்கள்) புகைத்து சாம்பலாக்குகிறார்கள். மேற்படி கணக்கு ஒரு நகரத்தின் ஒரு குடியிருப்பு பகுதிக்கு மாத்திரம்தான். இதனையே, ஒரு வட்டம், மாவட்டம், மாநிலம், தேசம் என கணக்கிட்டால் வரம்புமீறி எவ்வளவு பெரும்தொகை வீண்விரயம் செய்யப்படுகின்றது என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம். வரம்பு மீறுவோரையும், வீண்விரயம் செய்வோரையும் அல்லாஹ் விரும்பமாட்டான். இவ்வாறு வீண்விரயம் செய்வோராகவும், வரம்பு மீறுவோராகவும் நம் மக்கள் இருப்பின் ஒரு சிறந்த உண்மையான பயபக்தியுடையவர்களாக மாறுவது எங்ஙனம்?
அல்லாஹ் அருள்மறையிலே கூறுகின்றான்:
'ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்' (அத்தியாயம்: 5 (ஸூரத்துல் மாயிதா) 90வதுவசனம்).
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
'நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்;லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்: எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?' (அத்தியாயம்: 5 (ஸூரத்துல் மாயிதா) - 91வதுவசனம்).
புகைப்பது, புகைப்பொருட்களை தயாரிப்பது, விற்பது, அதனை பரிமாறுவது என புகை சம்பந்தப்பட்ட அனைத்துமே 'ஹராம்' என பல மார்க்க அறிஞர்கள் தங்களது ஒருமித்தக் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
உலகில்; எய்ட்ஸ் என்னும் உயிர்கொல்லிநோய், போர் மற்றும் விபத்தினால் மரணிப்பவர்களைவிட புகைபிடிப்பதால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஒரு ஆண்டில் புகைப்பதால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சத்தையும் தாண்டுகிறது.
சகோதரர்களே! நீங்கள் உங்கள் நலனுக்கு நல்லதைத் தேர்ந்தெடுப்பீர்களா? அல்லது கெட்டதைத் தேர்ந்தெடுப்பீர்களா?
இறைவன் விதித்த கடமைகளில் ஒன்றாகிய நோன்புடைய காலங்களில் இறைவனின் கட்டளைக்குச் சிரம் பணிந்து கலப்பற்ற தூய எண்ணத்துடன் பகல் முழுவதும் புகைப்பிடித்தலை தவிர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்ற அருமைச் சகோதரர்களே! தயவு செய்து சிந்தியுங்கள்! நோன்பு இல்லாத காலங்களில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது முறையா? இல்லை சரியா?
புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் இந்த கட்டுரையைப் படிக்கும் இந்த நேரத்திலிருந்து புகைப்பிடிக்கும் கெட்டப் பழக்கத்தை விட்டொழிப்போம் என்று உறுதி கொள்ளுங்கள். அத்தோடு புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள நம் சகோதரர்கள் நண்பர்கள் அனைவரையும் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து திருத்துவோம் என்றும் உறுதி கொள்ளுங்கள்.
இறைவனின் நேசத்தைப் பெறுவதிலிருந்தும் தடையாக இருக்கும் இதுபோன்ற வீண்விரயமான செலவினங்களை, இறை திருப்தியைப் பெற்றுத் தரும் அனாதைகளைப் பராமரித்தல், பள்ளிவாயில்கள் கட்டுதல் இன்னும் இதுபோன்ற இன்னபிற காரியங்களுக்கு பயன்படுத்துவோம் என்ற நல்லெண்ணம் கொள்ளுங்கள். இவ்வாறு இறைவன் ஏவிய காரியங்களை செய்வதிலும், விலக்கிய காரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதிலும் ஒருவொருக்கொருவர் போட்டியிட்டு நன்மையான காரியங்களை செய்வதில் முந்திக் கொள்வோமாக!
இறை கட்டளையை ஏற்று நடப்பதால் ஏற்படும் நன்மைகளையும், இறை கட்டளைக்கு மாறு செய்வதால் ஏற்படும் சோதனைகளையும் படிப்பினையாகக் கொண்டு நம்மை நேர்வழியின்பால் வழிகாட்டும் இறைவேதத்தை முழுமையாக உணர்ந்து பின்பற்ற முயலுவதே பயபக்தியுடையோரின் பண்பாகும்.
இறைவன் நமது இறையச்சத்தின் மூலம் நம் அனைவரையும் சிறந்த பயபக்தியாளர்களாக மாற்றி ஈருலக நன்மைகளும் கிடைக்க பேரருள் புரிவானாக!
No comments:
Post a Comment