சகோதரிகளின் ஒரு நிமிடக் கவிதைகள்

சகோதரிகளின் ஒரு நிமிடக் கவிதைகள் 


கண்ணியமிக்கவனே! கருணையாளனே! கண்ணே ரஹுமானே!
கல்பில் கணமே! கண்கள் குலமே!
பணிந்தேன் சிரமே! உணர்ந்தேன் சுகமே!
நீயே என் தஞ்சமே! அர்பணித்தேன் உன்னிடமே!  
அடிபணிந்தேன் அனுதினமே! 
அரவணைத்துக்கொள் என்னை என்றென்றும் உன்னிடமே. 

நன்றி: சகோதரி உம்மு உபைத்


இறை வணக்கத்தை
இணை வைப்பாளர்களின் இதயத்திலே
கொண்டு வருவது கடினம்
எழுதிய பலகையை விட
எழுத்தில்லாத வெற்றுப் பலகையில்
எழுதுவது எளிது

நன்றி: சகோதரி ஷெரின் கனி 


எண்பதையும் தலை நிமிர வைக்கும் அரை பாவாடை,
பதினாரையும் தலை குனிய வைக்கும் ஹிஜாப்,
இதுவா அடக்குமுறை!
ஆம் அடக்குமுறை தான்....
சேலை கட்டிய மரக் குச்சியின் கற்பை கூட சூறையாட விரும்பும் ஆண் மிருகங்களை அடக்கும் முறை தான், எங்களது ஹிஜாப்...

நன்றி: சகோதரி யாஸ்மின் ரியாஸ்தீன்    


உளியால் கருங்கல்லில் வடிப்பதோ சிற்பியின் கலை.
கவியால் சொல்லில் வடிப்பதோ 
கவிஞரின் கற்பனை...
நல்லறிவை நம் செயலில் வடிப்பதோ 
முஸ்லிம் சமுதாயத்தின் பெருமை. 

நன்றி: சகோதரி சாஜிதா. 

No comments:

Post a Comment