அருளாளன் (தொடரின் இறுதிப்பகுதி)
கட்டுரை: மதுரை அப்துல்லாஹ் மன்ஃபயி
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்தார்கள். (வியப்புடன்) 'சுப்ஹானல்லாஹ்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டிருக்கின்றன. திறந்து விடப்பட்ட அருட்பேறுகள்தான் என்னென்ன?' என்று கூறிவிட்டு, தமது அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்(நபி(ஸல்) அவர்களின் மனைவியர்)களை (இறை வணக்கத்திற்காக)த் துயில் எழுப்புங்கள். எனெனில் இவ்வுலகில் ஆடை அணிந்தவர்களாக இருக்கும் எத்தனையோ பெண்கள், மறுமையில் நிர்வாணமானவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலாமா (ரலி) ஆதார நூல்: புகாரீ)
மனிதன் செய்திடும் வீணான செலவுகளும் ஏராளம். உலகின் அழிவு ஆயுதங்களைத் தயாரிக்கும் நிலை ஓங்கி வருவதை நாம் இப்போது கண்கூடாகக் காணலாம். இவ்வாறு நவீன ஆயுதங்கள் தயாரிப்பது குறித்து ஐ.நா. சபை வெளியிட்டுள்ள குறிப்பு என்ன சொல்கிறது என்பதை காண்போம்.
'ஒரு நவீன வெடிகுண்டு விமானம் செய்யும் செலவில், 5000 டிராக்டர்கள் அல்லது 100 படுக்கைகள் கொண்ட 75 மருத்துவமனைகள், அல்லது 1000 மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வசதி கொண்ட அறிவியல் கல்லூரிகளை அமைக்கலாம்' என்பது நவீன ஆயுதங்கள் தயாரிப்பது குறித்து ஐ.நா. சபை வெளியிட்டுள்ள குறிப்பு.
தவிர கார்கில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடி குண்டு ஒவ்வொன்றின் விலையும் ரூபாய் 50,000 ஆகும்.
மனிதனை மனிதனே கொன்று குவிக்க அவன் செய்யும் வீண் செலவுகள் இவை.
கற்கால மனிதன் ஆயுதங்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடினான். தற்கால மனிதன் அணுஆயுதங்களைக் கொண்டு தன் இனத்தையே கொன்று குவிக்கிறான்.
கத்தியை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம். அழிவிற்கும் பயன்படுத்தலாம். ஆனால் மனிதன் ஆக்கும் சக்திக்குக் கொடுக்கப்பட்ட இறை அருளை, அழிக்கும் சக்திக்குப் பயன் படுத்திக் கொள்கிறான்.
அறிவியலில் மனிதன் எவ்வளவோ முன்னேறி விட்டான். எந்தவொரு தராசும் இன்றி இந்த உலகத்தையே எடை போட்டு விட்டான் என்றால் வியப்பாக இல்லையா?
பூமியின் எடை 5,885,516,000,000,000 (ஐம்பத்து எட்டு இலட்சத்து என்னூற்று என்பத்து ஐயாயிரத்து ஐந்நூற்று பதினாறு பில்லியின்) டன்களாகும். இந்த நிறுத்தல் முறையை கண்டு பிடித்தவர் ஹென்றிகாவென்டிஷ் (ர்நசெல ஊயஎநனெiளா) என்ற ஆங்கில விஞ்ஞானி.
இறைவன் ஒவ்வொன்றின் வாழ்வின் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப பொருத்தமாகவே படைத்துள்ளான்.
குன்றைப் படைத்த இறைவன்தான் சிறு குளவியையும் படைத்தான். கடல் படைத்த கடவுள்தான் கன்னியர் தம் குழலுக்கு மலர்களையும் படைத்தான். அணிலைப் படைத்த ஆண்டவன்தான் ஆதவனையும் படைத்தான். யானையைப் படைத்த ஏகன்தான் எறும்பையும் படைத்தான் என்பதைச் சிந்தித்தோமானால், ஒரு நாளும் அந்த அருளாளனை மறக்க மாட்டோம். மனிதன் சுயமாகத் தன் எண்ணத்தின் பிறக்க முடிவதில்லை. அப்படி முடிந்திருக்குமானால், அவன் செல்வச் செழிப்பு மிக்க நாடுகளில் பிறக்க எண்ணுவான். அவ்வாறே, தன் இச்சைப்படி இறக்க நாடுவானேயானால், அவன்தன் அனைத்து ஆசைகளையும் முழுமை செய்துவிட்டு, அவன் நாடியபோது இறக்க விரும்புவான்.
பிறப்பிலும், இறப்பிலும் அவன் தன் இச்சைப்படி வாழ முடியாதபோது, இடையில் உள்ள வாழ்க்கையில் மட்டும் அவன் எப்படித் தன் இச்சைப்படி வாழ்க்கை நடத்தலாம்?
'இன்னும் அல்லாஹ்வின் அரு(ட்கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ்; மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.' (அத்தியாயம்16 ஸூரத்துந் நஹ்ல் 18வது வசனம்).
அருளாளனின் அனைத்து அருள் பாக்கியங்களையும் அனுபவித்துக் கொண்டே அவனுக்கு மாறு செய்யலாமா? அவன் தண்டிக்க நாடிவிட்டால் மனிதனின் நிலை என்னாவது?
'மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணம் கூறுகிறான்: அது அச்சமில்லாததும், நிம்மதியுடனும் இருந்தது: அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ் வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது: ஆகவே, அவ்வூரார்; செய்து கொண்டிருந்த (தீச்)செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான்.' (அத்தியாயம் 16 ஸூரத்துந்நஹ்ல் 112வது வசனம்).
வல்ல அல்லாஹ்வின் - அந்த அளப்பரிய அருளை அனுபவித்துக் கொண்டு, அல்லாஹ்வை மறந்து, ஆடு, மாடுகளைப்போல் புசித்துக் கொண்டு திரிந்தோமானால்..?
'ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டி இருக்கும். இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.' (அத்தியாயம் 75 ஸூரத்துல் கியாமா வின் 24 மற்றும் 25வது வசனங்கள்)' என அருள்மறை குர்ஆன் மூலமாக அல்லாஹ் எச்சரிக்கும் வசனங்களை மறக்க வேண்டாம்.
(எல்லாவற்றிருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்).

No comments:
Post a Comment