SURAH Aala-IMRAN Verses 1 -5 with Tarjuma in Tamil & English


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
3. SURAH AaL-IMRAN
Verses 1 -5 with Tarjuma in Tamil & English



3:1 الم
அலிஃப், லாம், மீம்
Alif. Lam Mim

3:2 اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்
Allah is. Beside Whom none is to be worshiped. Self-Living, Sustainer of others

3:3 نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَأَنزَلَ التَّوْرَاةَ وَالْإِنجِيلَ
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்
He sent down to you this true Book, confirming preceding Books, and He sent down Tawrat and Injil before this

3:4 مِن قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَأَنزَلَ الْفُرْقَانَ ۗ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ ۗ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ
இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ; அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்
A for time guiding the people and sent down the criterion; No doubt, for those who denied the Signs of Allah is the severe torment and Allah the Mighty, is Possessor of the power of retribution

3:5 إِنَّ اللَّهَ لَا يَخْفَىٰ عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ
வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை
Nothing is hidden from Allah, neither in the earth nor in the heaven


Imam Ahmad recorded that Asma' bint Yazid bin As-Sakan said, "I heard the Messenger of Allah say about these two Ayat,

﴿اللَّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ ﴾

(Allah! None has the right to be worshipped but He, the Ever Living, the One Who sustains and protects all that exists) ﴿2:255﴾, and,

﴿الم - ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ﴾

(Alif-Lam-Mim. Allah! None has the right to be worshipped but He, the Ever Living, the One Who sustains and protects all that exists) ﴿3:1-2﴾,

«إِنَّ فِيهِمَا اسْمَ اللهِ الْأَعْظَم»

(They contain Allah's Greatest Name.)

This is also the narration collected by Abu Dawud, At-Tirmidhi and Ibn Majah, and At-Tirmidhi said, "Hasan Sahih''.

Further, Ibn Marduwyah recorded that Abu Umamah reported that the Prophet said,

«اسْمُ اللهِ الْأَعْظَمُ، الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ، فِي ثَلَاثٍ: سُورَةِ الْبَقَرَةِ وَآلِ عِمْرَانَ وَطه»

(Allah's Greatest Name, if He was supplicated with it, He answers the supplication, is in three Surahs - Al-Baqarah, Al `Imran and Ta-Ha.)

‎(As a guidance to mankind) in their time.

﴿وَأَنزَلَ الْفُرْقَانَ﴾

(And He sent down the criterion) which is the distinction between misguidance, falsehood and deviation on one hand, and guidance, truth and piety on the other hand. This is because of the indications, signs, plain evidences and clear proofs that it contains, and because of its explanations, clarifications, etc.
Surah Al `Imran was revealed in Al-Madinah, as evident by the fact that the first eighty-three Ayat in it relate to the delegation from Najran that arrived in Al-Madinah on the ninth year of Hijrah (632 CE).

6 TO 10.
From Verses 6-10 with Tarjuma Tamil & English

3:6 هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
3:6. அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
It is He Who forms your shape in the wombs of the mothers as He pleases. Besides Whom none is to be worshiped the Dominant, the Wise.

TAFSIR-
‎3:6 This Ayah refers to the fact that,'Isa,son of Mariyam is a created servant,just as Allah created the rest of mankind.Allah creates Isa in the womb (of his mother) shaped him as He(Allah) willed,Therefore hoe could Isaa be divine? 3:6 - அல்லாஹ்வின் இரண்டு பெயர்கள் இடம் பெறுகின்றன. அல்-அஜீஸ் (மிகைத்தவன்),அல்-ஹகீம் (ஞானமுள்ளவன்), வசனம் 3:8 வஹ்ஹாப் - கொடை மிக்கவன்

3:7 هُوَ الَّذِي أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ ۖ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ ۗ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
It is He Who sent down upon you the Book, in which some verses have clear meaning, they are the substance of the Book, and others are those, in the meaning of which there is doubt. Those in whose hearts there is perversity pursue doubtful one desiring deviation and searching their own viewpoint of it, and its right interpretation is known to Allah alone. And those of firm knowledge say, 'We believed in it, all is from our Lord and none accept admonition save men of understanding.

‎3:7 Allah states that there 2 types of Ayahs in the Quran..They are Muhkamat ayas & Mustashabihat ayas. Muhkamat ayas-entirely clear n plain,Mustashabihat ayas-not entirely clear for many,so those who refer to the muhkam ayah to understand the mustashabih ayah will have acquired the guidance and vice versa.
Muhkamat ayas explains the abrogating rulings,the allowed,prohibited laws,limits,obligations & rulings that should be belived in and implemented...Mustashabihat ayahs includes the abrogated ayat,parables,oaths and what should be belived in,but not implemented.
The Messenger of Allah(pbuh) recited this Ayah and then he said,"When you see those who follow what is not so clear of Quran,then they are those who Allah described,so beware of them."- Buhari.

3:8 رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
3:8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
'O our Lord! Let not our hearts become perverse after this that You guided us and bestow on us mercy from Yourself; no doubt, You are the big Bestower.

3:9 رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ
3:9. “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
'O our Lord! No doubt You are the assembler of all people for the Day in which there is no doubt. Undoubtedly the promise of Allah changes not.

3:8,9 These ayahs are duas of rightly guided persons.Allah says that they will supplicate to their Lord like this..Our Prophet(pbuh) recited these duas often. 


3:10 إِنَّ الَّذِينَ كَفَرُوا لَن تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُم مِّنَ اللَّهِ شَيْئًا ۖ وَأُولَٰئِكَ هُمْ وَقُودُ النَّارِ
3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
No doubt, those who became infidels; their riches and their children shall avail them nothing against Allah and it is they who are the fuel of the hell.

3:10 Allah states that the disbelivers shall be fuel for the fire..none will help them on the Day of Judgement.
 இவ்வசனத்தில் அல்லாஹ் ஈஸா(அலை) அவர்களை தான் விரும்பியவாறு படைத்தான் அவ்வாறே மனித இனத்தையும் படைத்ததாக தெளிவு படுத்துகிறான்.
 இதில் அல்லாஹ் இரு வகை வசனங்கள் குர்ஆனில் உள்ளதாக கூறுகிறான். அவை முஹ்கமாத் மற்றும் முதஸாபிஹாக் வசனங்கள். முஹ்கமாத் வசனங்களை அனைவரும் அறிய முடியும். முதஸாபிஹாத் வசனங்களை அனைவரும் விளங்க முடியாது.முஹ்கமாத் வசனங்கள் வரைமுறைகள், ஹலால், ஹராம், கடைமைகள் ஆகியவற்றை நம்புவதையும் நடைமுறைபடுத்துவதையும் தெளிவுபடுத்தும். முதஸாபிஹாத் வசனங்கள் நீதி, உறுதிமொழி மற்றும் நம்ப வேண்டியதும் நடைமுறை படுத்த கூடாதுமான விஷயங்கள் உள்ளவை. நபி(ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதி விட்டு கூறினார்கள்:'குர்ஆனில் தெளிவாக இல்லாத வஷயங்களை யார் பின்பற்றுகிறாரோ அவர்தான் நல்லுபதேசம் பெற்மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் அவர்களை காணும் போது கவனமாக இருங்கள்'(புஹாரி)
 இவை துஆ. நேர்வழி அடைந்தோர் தங்கள் இறைவனிடம் இவ்வாறுதான் துஆ செய்வார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.நபி(ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அடிக்கடி கேட்பார்கள்.
3:10 இந்த வசனத்தில் அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் தான் நரக நெருப்பின் எரி பொருட்கள் என்று கூறுகிறான். மேலும் மறுமை நாளில் அவர்களுக்கு யாதொரு உதவியும் இருக்காது.
வசனம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்தித்து நபி ஈசா(அலை) அவர்கள் தொடர்பாக விவாதிக்க வந்த நஜ்ரான் பகுதி கிருத்தவ குழுவினர் வ்ந்தனர் .இவர்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் இந்த அத்தியாயத்தின் ஆர்ம்ப 83 வசனங்கள் அருளப்பெற்றன.
அப்போது அவர்கள் குரானிலிருந்தே சில வசனங்களை சுட்டி காட்டி கேள்வி எழுப்பினர்."மரியமின் மைந்தர் மசீஹ் (எனப்படும்)ஈசா,அல்லாவின் தூதரும் அவனது வார்த்தையும்(கலிமா)ஆவார்.அதை அவன் மரியமிடம் போட்டான்.(அவர்)அவனிடமிருந்து உருவான உயிரும்(ரூஹ்)ஆவார்.(4:171). இதற்கு மறுப்பாகவே அல்லா இந்த வசனங்களை3:7(முஹ்கம்,முத்தஷாபிஹ் பற்றிய)அருளினான்.
அல்லாஹ் ஒருவனே அல்லாஹ் தேவையற்றவன் .அவன் யாரையும் பெறவுமில்லை.அவன் யாராலும் பிறக்கவுமில்லை(112:1-4)
நீங்கள் அல்லாவுக்கு எதையும் இணையாக்கக்கூடாது.பெற்றோருக்கு உதவ வேண்டும்,வறுமையின் காரணத்தால் உங்கள் குழந்தைகளை கொலை செய்யக் கூடாது (6:151)
"நான் அல்லாவின் அடியான் ,எனக்கு அவன் வேதத்தை அளித்தான் ,என்னை (அவனுடைய )தூதராக்கினான்"என்று தொட்டில் குழந்தையாக இருந்த ஈசா கூறினார் (19:30)
ஆகிய முஹ்கம் வசங்களைக் கொண்டு 4:171 போன்ற முத்தஷாபிஹ் வசனங்களை விளங்கிக் கொள்ள வேண்டும்
(இப்னு கஸீரில்ருந்து சாரம்சம்)



بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
3. SURAH AaL-IMRAN
From Verses 11-15 with Tarjuma Tamil & English

3:11 كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَذَّبُوا بِآيَاتِنَا فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ ۗ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ
3:11. (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது; அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்; ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
Like the people of Pharaohs and those before them, they belied our Signs; then Allah seized them for their sins and Allah's punishment is severe.

3:11
In the previous ayah, Allah tells us about the people who do Kufr. In this ayah Allah mentions Firraun and his people as an example.Firaun’s wealth and power had made him arrogant before Allah (swt).Such
arrogance has been the case of all those who think that they do not need to live their lives in submission to Allah (swt),including Firaun and his people, as well as all those before them who rejected the Message of Allah (swt) when it reached them. Allah (swt) brings our attention in this ayah to such people.Then Allah (swt) tells us that He (swt) seized the people of Firaun for their sins. When the people did what was displeasing to Allah, they drew his wrath upon themselves. We all know that Allah is the most forgiving, the most merciful, but at the same time he is also severe in punishment. The fear of Allah(SWT) punishment is a great mercy for us, to help us avoid comitting actions displeasing to him.

‎3: 11
இதற்கு முந்திய வசனத்தில்,அல்லாஹ் குப்ர் செய்யும் மக்களை பற்றி குறிப்பிடுகிறான்.இந்த வசனத்தில் அல்லாஹ் பிரஅவ்னயும் அவன் மக்களையும் எடுத்த்க்காட்டாக கூறுகிறான்,பிரவ்னுடைய அதிகாரமும்,செல்வமும் அல்லாஹ் வின் முன் ஆணவக்காரனாக ஆக்கியது.அதே ஆணவம்தான் அல்லாவின் நினைவு துளி இல்லாமல் வாழ்க்கை நடத்தும் மக்களிடமும் ,பிரவ்னின் மக்களிடமும் ம்ற்றும் அவ்ர்களுடைய காலத்திற்கு முன்னர் வாழ்ந்த அல்லாவுடைய செய்தியை ஏற்க மறுத்த மக்களிடமும் காணப்பட்டது.அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.அல்லாவுடைய சினத்துக்கு ஆளாகிவ்ட்டார்கள்.அதுபோல் ஆணவம் கொண்டு நடக்கும் மக்களுக்கு அல்லா இந்த வசனத்தில் எச்சரிக்கிறான்.அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவனும் வேதனை தருபவனும் ஆவான் அவனிடமிருந்து யாரும் தப்ப முடியாது. 

3:12 قُل لِّلَّذِينَ كَفَرُوا سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَىٰ جَهَنَّمَ ۚ وَبِئْسَ الْمِهَادُ
3:12. நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.
Say to the disbeliveers, 'soon you shall be overcome and be driven towards the hell and that is an evil bed'.

‎3:12
This ayah was revealed shortly after the battle of Badr where the muslims emerged victorious defeating the Quraysh. Our Prophet (SAW)hoped that the jews of Madinah would take a lesson from this and accept his message. However, they still refused to accept the message and they said that if the muslims were to fight them they would surely be defeated. This ayah has been revealed as a response to those people. Allah asks our prophet to tell them that all those who would dare to oppose his Message would be overcome and they would be gathered onto Hell.
 


3:12
இந்த வசனம் பத்ரு போரின் வெற்றிக்கு பிறகு இறங்கியது. அல்லாஹ்வின் தூதர் யூதர்களை திறட்டி குறைஷியருக்கு அல்லாஹ் கொடுத்த தோல்வியை அல்லாஹ் உங்களுக்கு தரு முன் இஸ்லாத்தை ஏற்ருக்கொளளும்மாறு கூறினார்கள். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த வசனம் அவர்களுக்கு பதில் கொடுப்பதாக இறங்கியது.  

3:13 قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا ۖ فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ ۚ وَاللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَن يَشَاءُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُولِي الْأَبْصَارِ
3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
No doubt, there was a sign for you in two groups that encountered among themselves. One gang fighting in the way of Allah and the other disbeliveers that they understood them double of themselves in their eyesight; and Allah strengthens with His help whom He pleases. No doubt, in it there is teaching after seeing for the men of understanding.

‎3:13
In this ayah Allah(SWT) brings our attention to the battle of Badr and calls it a sign. He says that One of the two armies that met for battle had a great victory while the other was utterly defeated.Then Allah
(swt) says “whom they saw to be twice their number with their own eyes”. There are actually two meanings that this part of the ayah.One meaning is that when the Muslim army saw the Quraysh army during the battle, the Quraysh army appeared to the Muslims as twice their number.So when the Muslims saw the Quraysh to be twice their number it was a test of their Iman and their trust and reliance on Allah
(swt). Those who passed the test pressed forward into battle because they knew that Allah (swt) was with them.The other meaning that this part of the ayah gives is that it was the Quraysh army who saw the
Muslims to be twice their number.In the eyes of the soldiers of the Quraysh they saw a giant Muslim army, almost twice their own in number, when in reality the Muslims were much fewer than them. When this happened, the soldiers of the Quraysh were struck with fear.Here the help of Allah (swt) was victory, and He gives help and victory to whomsoever He pleases. Finally, he says that the battle of Badr is a lesson for everyone(The prophet(SAW), the Muslims, the Quraysh, the Jews of Madinah and for us today) to see,the end of those whom Allah(SWT) is pleased with and those whom he is displeased with.
 

3:13
இந்த வசனம் பத்ரு போர் நாளில் அருளப்பட்டதாகும். அன்றே தினம் முஸ்லீம்கள் முன்னூற்று பத்துக்கும் சற்று கூடுதலானபேரே இறுந்தனர். இணைவைப்பாளர்கள் அவர்களைவிட மூன்று மடங்கு இறுந்தனர். ஒவ்வொறு அணியனரும் எதிர் அணியினரை நேருக்கு நேர் பார்த்த பொழுது இறு மடங்காக கண்டனர். முஸ்லீம்களை பொருத்த வரையைல் அவர்கள் தங்கள் இறைவன்மீது முழூ நம்பிக்கை வைத்து அவனையே முன்னோக்கி அவனிடமே உதவி கோர வேண்டும் என்பதே இவ்வாறு காட்டப்பட்டதன் நோக்கமாகும்.
அவ்வாறே இணை வைப்பாளர்களும் தம்மை விட இரு மடங்கினராக முஸ்லிம்கள் இருந்ததை கண்டனர் .இணவைப்பாளர்களுக்கு அச்சம்,ண்டுக்கம்,பீதி மற்றும் கிலி ஆகியவை உண்டாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்களுக்கு அவ்வாறு காட்டப்பட்டது. 

3:14 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ۗ ذَٰلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَاللَّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
Adorned for men is the love of these lusts, women and children and the stored up heaps of gold and silver and branded horses and cattle and crops. This is the capital of living world; and it is Allah with Whom there is an excellent destination.
3:14
In this Ayah, the word 'Shahawat'refers to 'things of desire'.He calls women, children, hoarded heaps of gold and silver, branded horses, cattle, well-tilled land things of Shahawat. He says that the 'Shahawat'
bring us pleasure and enjoyment but only in this world. But our love of Allah will fetch us an excellent home in the hereafter which is far better. Lesson to be learnt is that Shahawat are a test for mankind and they draw us towards them. if we can pass this test then we will have an excellent home with Him in the Hereafter. 
மனிதர்களுக்கு இவ்வுலகில் கவர்ச்சி யாக காட்டப்பட்டுள்ள
பெண்கள்: பெண்களையே அல்லாஹ் முதலில் குறிப்ப்டுகிறான் .ஏனென்றால் பெண்களால் ஏற்படும் குழப்பங்கல்தான் மிக க்டுமையானது.
ஆண்மக்கள்:
ஆண்மக்கள் மீதான மோகம் சில வேளைகளில் பகட்டுக்கும்,பெருமைக்கும் வழிகோலும்.
பொன்னாசை:
இந்த மோகம் பெருமை,பகட்டு,னலிந்தவர்களிடம் அகந்தை காட்டல்,ஏழைகளை அடக்கி ஆளல் ஆகியவற்றுக்கு சிலவேளைகளில் வழிகோலிவிடும்.
குதிரை:
சில வேளைகளில் பகட்டுக்காகவும்,முஸ்லிம்களை எதிர்பதற்காகவும் அவர் குதிரையை பராமரித்தால் அது பாவச்சுமையாகிவிடும்.
கால் நடைகள்:
இது ஆடு மாடு ஆகியவற்றைக் க்றிக்கும்.
மண்ணாசை:
இது பயிர் செஇவதற்கு உரிய நிலத்தைக் க்றிக்கும்
இவை அனைத்தயும் விட சிறந்த உறைவிடம் அல்லாவிடத்தில் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.3:14
 

3:15 قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَٰلِكُمْ ۚ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
3:15. (நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
Say you 'shall I inform you of something better than that.' For pious ones there are gardens with their Lord beneath which rivers flow therein shall they abide, and pure wives and Allah's pleasure. And Allah sees His bondsmen.

‎3:15
In this ayah Allah(SWT) describes us the execllent home mentioned in the previous ayah. He says that the paradise is for those who have Taqwa and are pious. Then he describes it saying , it has gardens,
flowing rivers , pure spouses and the Pleasure of Allah. And finally Allah reminds us that he is always seeing his Slaves. Thus we should become more aware and concious that Allah is watching every action
of ours.




بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
3. SURAH AaL-IMRAN
From Verses 16-20 with Tarjuma Tamil & English

3:16 الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
3:16. இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.
Those who say, 'Our Lord we did accept faith, then forgive us our sins and save us from the torment of the hell.'


3.16 ------இறையச்சம் உடையவர்கள் ,அல்லாஹ்வையும் ,மலக்குகளையும் ,வேதங்களையும் ,ரசூல்மார்களையும் ,இறுதி நாளையும் கலாகத்ரையும் நம்புவதோடு ,பாவமன்னிப்பு கேட்டு,நரக வேதனைலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்.இறைவனின் தயவாலும் ,கருணையாலும் பாவத்தை மன்னிக்க,- அவனிடம் கோருவார்கள்


3:17 الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
3:17. (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
The steadfast and truthful and humble and those who spend in the way of Allah and those who seek forgiveness in the latter part of the night.


3.17------இவர்கள் எல்லா காலகட்டங்களிலும் சத்தியத்தையும் ,பொறுமையையும் கொண்டு உதவி தேடுவார்கள்.பொய்கள் பேசாமல் உண்மையே பேசுபவர்களாக இருப்பார்கள்.இறைவன் ஆகுமாக்கியதை ஏற்று விலக்கப்பட்டதை தவிர்த்து நடப்பார்கள் .இறைவன் பொருத்தத்தை நாடி அதிக ஸதகா,ஸகாத் செய்வார்கள் ,பாவமன்னிப்பு அதிகம் கோருவார்கள்.
குறிப்பாக -இரவில் பிற்பகுதியில் நின்று வணங்குவார்கள் .,பின்னிரவுகளில் பாவ மன்னிப்பு கோருவார்கள் .பின்னிரவு நேரத்தில்(சஹர் நேரம்) பாவமன்னிப்பு கேட்பதின் சிறப்பை இவ்வசனம் உணர்த்துகிறது .
 ‎3:17 Allah says in this ayah(they are those who are patient while performing acts of obedience abandoning the prohibition,concerning the proclamation of faith by performing the difficult deeds.they submit n obey Allah from their wealth on all the acts of obedience they were commanded,being kind to kith n kin,helping the needy n comforting them,They beg Allah's pardon in the last hours of night n this testifies to the virtue of seeking Allah's forgiveness in the last part of night.
It was reported,that when Ya'qub(pbuh) said to his sons(I ll ask my Lord to forgive for you 12:98) he waited untill the "Sahar"time to say his supplication.
Messenger of Allah said,"Every night,when the last 3rd of it remains Our Lord,the Blessed,Superior,descend to the lowest heaven saying' Is there anyone to ask me,so that I may grant him his request.Is there anyone to invoke me,so that I may respond to his invocation,Is there anyone seeking my forgiveness so that I may Forgive Him"

3:18 شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
3:18. அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
Allah bore witness that none is to be worshiped save He, and the angels and the men of learning (too) standing with justice; none is to be worshiped save He, the most Reverend, Wise.


3.18-------ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்று கலிமா சொல்லவேண்டியது கடமை.
இந்த வசனத்தில் அல்லாஹ் இதை உறுதிபடுத்தி சாட்சி கூறுகிறான் ,தொடர்ந்து வானவர்கள் ,அறிவாளர்கள் சாட்சி சொல்வதை கூறி கற்றோரின் அந்தஸ்தை உயர்த்தி கல்வியின் மகத்துவத்தை கூறுகிறான்.அல்லாஹ் வல்லமை மிக்கவன் ஆவான் .அவனது சமுகம் எப்போதும் கண்ணியமும் பெருமையும் கொண்டதாகவே இருக்கும் ,அவ்வாறே,தனது சொல் செயல் ஆகியவற்றிலும் தான் வகுத்த விதி மற்றும் மார்கத்திலும் அல்லாஹ் நியானம் நிறைத்தவன் ஆவான் . 

‎3:18 Allah bears witness of Himself n about His Angels.This Ayah emphasizes the great virtue of those who have knowledge. 
3:19 إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ ۗ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۗ وَمَن يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
Verily, only Islam is the Din (Religion) before Allah, and the men of Book did not dissent but after the knowledge had come to them, because of their hearts burning. And whoso denies the signs of Allah; then no doubt Allah is to call to account very soon.


3.19-------இவ்வசனத்தில் வேதம் வழங்கப்பட்டோர் ,தெளிவாக சத்தியம்,அசத்தியம் பிரித்து அறிந்த பின்னரும் வேண்டுமென்றே சுயநலத்துக்காகவும்,காழ்ப்புனர்ச்சியிலும் இஸ்லாத்தை மறுப்பதாக இறைவன் கூறுகிறான் .அல்லாஹ் தனது வேதத்தில் அருளியுள்ளதை யார் மறுத்தாலும் அதற்காக அவருக்கு அல்லாஹ் தண்டனை வழங்குவான் ,வேதத்தை பொய்யாக்கி ,அதற்கு மாறு புரிந்த காரணத்தால் அவரிடம் விசாரணை செய்து அவரைத் தண்டிப்பான்  

 ‎3:19 In this Ayah Allah said,asserting that the only religion accepted with Him is Islam. 

3:20 فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ ۗ وَقُل لِّلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ ۚ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوا ۖ وَّإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ ۗوَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ
3:20. (இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
Again O beloved! If they argue with you, then say 'I have submitted my face before Allah and those who followed me; and say to the men of Books and to those who read not; 'have you submitted'? Hence if they submit, then they got the guidance and if turn their faces, then upon you it is only to convey the message, and Allah is seeing His bondsmen.


3.20---------தலை சாய்த்துவிட்டோம்-அதாவது ஏக இறைக்கொள்கை தொடர்பாக (நபியே)உம்முடன் அவர்கள் தர்க்கம் செய்ய வந்தால் ,நான் அல்லாஹ்வை மட்டுமே உளப்புர்வமாக வழிபட்டேன் ,அவன் தனித்தவன் ,அவனுக்கு இணையாகவோ ,நிகராகவோ யாருமில்லை ,அவனுக்கு மனைவி ,குழந்தை கிடையாது என்று நபியே நீங்கள் கூறிவிடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் .
இவ்வசனத்தில் மற்றவர்களுக்கு நபிமார்கள் இறைத்தூதை எத்தி வைப்பது மட்டுமே கடமை.மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை ,மேலும் நிராகரிப்பாளர்களுக்கு நபிமார்கள் பொறுப்பு காட்டப்படமாட்டார்கள் என்றும் கூறுகிறான் .தவாஹ் பணியில் ஈடுபடுவோரும் மார்க்கத்தை எத்தி வைத்தால் போதுமானது . அதாவது நேர்வழியில் செலுத்தப்படுவதற்கு தகுதியானவர் யார்,அதற்கு தகுதியற்றவர் யார் என்பதை அல்லாஹ் அறிந்துள்ளான்.

‎3:20 In this ayah Allah is saying to Prophet(pbuh) how to treat with the dis beleivers(jews n christians) when they argue about Tawhid.



3. SURAH AaL-IMRAN
From Verses 21-25 with Tarjuma Tamil & English 



3:21 إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
3:21. “நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
Those who deny the signs of Allah, and slay the Prophets unjustly and kill the men ordering justice; give them good tiding of painful torment. 


‎3:21( AND KIIL THOSE MEN WHO ORDER JUST DEALINGS)
thus demonstrating the worst type of arrogance.Indeed the Prophet said,kibr (arrogance) is refusing the truth and degrading people.Allah said,(THEN ANNOUNCE THEM A PAINFUL TORMENT) meaning painful and humilitating.. 


3:22 أُولَٰئِكَ الَّذِينَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
3:22. அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன; இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
These are they whose deeds have perished in this world and the next and they shall have no helpers. 



3:23 أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِّنْهُمْ وَهُم مُّعْرِضُونَ
3:23. வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
Have you not observed those given a portion of the Book are being called to the Book of Allah that it may judge between them, then a faction of them turns away being opposed to it?

3:23 Allah criticizes the Jews ans christians who claim to follow their books The TAWRAH AND INJIL..


3:24 ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَاتٍ ۖ وَغَرَّهُمْ فِي دِينِهِم مَّا كَانُوا يَفْتَرُونَ
3:24. இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
This boldness came to them because they say, 'The fire shall not touch us except for a number of days'; and the lies which they used to invent deceived them in their religion.


3:24( THE FIRE SHALL NOT TOUCH US BUT FOR A NUMBER OF DAYS..)
MEANING: What made them dare to challenge..is their false claim that Allah will punish them for seven days in the fire,a day for every thousand years in this life.. 


3:25 فَكَيْفَ إِذَا جَمَعْنَاهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
3:25. சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
Then how will it be, when We shall gather them for a Day in which there is no doubt; and every soul shall be paid in full what it has earned and they shall not be wronged.
Then how will it be, when We shall gather them for nd every soul shall be paid in full what it has earned and they shall not be wronged.

3:25 (HOW WILL IT BE WHEN WE GATHER THEM TOGETHER ON THE DAY ABOUT WHICH THERE IS NO DOUBT)
MEANING:What will their condition be like after they have uttered the lie about Allah,rejected His Messengers and killed His Prophets and the Scholars who enjoined righteousness and forbade evil,Allah will ask them about all this and punish them for what they have done..




No comments:

Post a Comment