‘நான் எதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேனோ, அதை எடுத்து நடங்கள்! எதை
விட்டும் உங்களை நான் தடுக்கின்றேனோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்’
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை
(கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள்! ஏனெனில் உங்களுக்கு முன்
வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு
முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக்
கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள்! எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எனக்குக் கட்டுப்பட்டவன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவனாவான், எனக்கு
மாறு செய்பவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனாவான் என நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) எதையாவது செவியுற்றால்
அதைவிட அதிகப்படுத்தாதவர்களாகவும் அதைவிட குறைக்காதவர்களாகவும்
திகழ்ந்தார்கள்’ என்று அபூஜஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும்
நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து ‘வறுமையை
(நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது
ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது
பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை
திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். அல்லாஹ்வின் மீது
ஆணை! வெள்ளை வெளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன்.
அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
யுக முடிவு நாள் வரை எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் (இறைவனால் உதவி)
செய்யப்படுபவர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை
எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது’ என்று நபி
(ஸல்) அவர்கள் கூறியதாக தம் தந்தை வழியாக முஆவியா (ரலி)
அறிவிக்கிறார்கள்.
‘எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே
இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட
இயலாது’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
இந்த மார்க்கத்தில் அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கிக்
கொண்டே இருப்பான். அவர்களை தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான்’ என
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஇனபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் மரணித்து விட்டால்
அவனது அனைத்து அமல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன மூன்றைத் தவிர,
(அவர் செய்யும்) நிலையான தர்மம், அல்லது பயனுள்ள கல்வி, அல்லது அவருக்காக
பிரார்த்திக்கும் அவரது நல்ல குழந்தை.’ (முஸ்லிம்).
எவர் தனது சகோதரனுக்காக மறைவில் பிரார்த்திக்கின்றாரோ ஒரு வானவர்
நியமிக்கப்பட்டு உமக்கும் அது போன்று எனக் கூறிக் கொண்டிருப்பார்’
(மூஸ்லிம்).
சிலர் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறும் போது வானவர்கள்
அவர்களை சூழ்ந்து கொள்கின்றனர், அருள் அவர்களை வியாபிக்கிறது, அவர்கள்
மீது ஸகீனத் எனும் அமைதி இறங்குகின்றது, அல்லாஹ்விடத்தில் அவர்களைப்
பற்றி நினைவுகூறுகின்றனர்’ (முஸ்லிம்).
29. 'எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக்
காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள்
நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள்,
'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில்
ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது,
பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால்
'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று
பேசிவிடுவாள்' என்றார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2
31. இவருக்கு (அலீ(ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன்.
அப்போது அபூ பக்ரா(ரலி) என்னைச் சந்தித்து 'எங்கே செல்கிறீர்?' எனக்
கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் 'நீர்
திரும்பிச் செல்லும்; ஏனெனில், 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால்
சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே
நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்' அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்;
(நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன்
நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, 'அவர் அவரைக் கொல்ல
வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்' என கூறினார்'
என அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார்.
Volume :1 Book :2
431. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
சூரிய கிரகணம் ஏற்பட்ட சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்னர்
'இன்று எனக்கு நரகம் எடுத்துக் காட்டப்பட்டது. அது போன்ற (மோசமான)
கோரக் காட்சி எதையும் நான் கண்டதில்லை' எனக் கூறினார்கள்.
537. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம்
இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு
மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில்
நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும்
கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்." என அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்.
--
நன்றி சகோதரர்
மீரான்
No comments:
Post a Comment