வயதான வெளிநாட்டுக் கணவன்!!

வயதான வெளிநாட்டுக் கணவன்!!


 

மூட்டை முடிச்சும்
முட்டுவலியும்
மூச்சிப்பிடிப்புடன்
வீடு வந்து சேர்ந்தேன்
வளைகுடாவிலிருந்து
விடுதலையாகி வந்தேன்!


மணக்கும் மனைவியின்
முகமோ சுருக்கம் கண்டு;
சுறுக்கமாய் முதுமைக் கொண்டு!
முன்னாடி நிற்கும் எனைத்தெரிய
கண்ணாடு போடும்
திரை மறைத்த விழி!

நரைக்கொண்டு
கரைப்படிந்து;
உழைத்தக் காசை
செலவுச் செய்ய
வியாதியுடன் வந்திருக்கிறேன்
வயோதிகத்தில் வந்து நிற்கிறேன்!

இளமைக்கு வேட்டு வைத்து
கடமைக்கு ஓட்டுப் போட்டு
கடனுக்கு ஒட்டுப்போட்டு;
பாலையிலேப் பலக்காலம்!

செழிப்பான வாலிபத்தை
மாதச் சம்பளத்திற்கு
விற்றுவிட்டு;
நமக்கென்று துணைவேண்டி
ஓடிவரமுடியாமல்
ஊன்றி வருகிறேன்
குச்சினை!

எட்டி உதைக்கும்
பிள்ளை வேண்டி
ஏங்கி நிற்கும் வயதான
வெளிநாட்டுக் கணவன்
உள்நாட்டில் உன்னோடு!

-itzyasa blogspot

No comments:

Post a Comment