மனிதனின் மரணம்


* ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சுவைக்க வேண்டியவன் ஆவான். நீங்கள் அனைவரும் உங்களின் கூலியை மறுமை நாளில்தான் முழுமையாக பெறுவீர்கள். (3:185)

* எங்கிருந்தாலும் மரணம் உங்களிடம் வந்தே தீரும் -- நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரி.(4:78)

* தீனுக்காக --இறை நெறிக்காக நீங்கள் தாயகத்தை துறக்க நேரிடும்போது மரணத்துக்கு அஞ்சி அதை கை விட்டு விடாதீர்கள்.(4:197)

*மரண வேளை வந்துவிட்டால் வானவர்கள் உயிரைக் கைபற்றுகிறார்கள் .அதில் அவர்கள் எந்த குறையும் வைப்பதில்லை.(6:61)



* இறைவனை எதிர்த்து போரிடும் மக்களின் உயிர்களை வானவர்கள் கடுமையான முறையில் கைபற்று கிறார்கள்.(6:93)

* இறைவனை மறுப்பவர்கள் ,மரணத்தின்போது இறை மறுப்பின் பாதிப்பை உணர்ந்து கொள்வார்கள்.(7:37)

* இறை நிராகரிப்பவர்களின் உயிர் பிரியும்போது வானவர்கள் அவர்களை வேதனைபடுத்துவார்கள்.(8:50)

*இறைவனுக்கு கீழ்ப்படியாமல் வரம்பு மீறி நடப்பவர்கள் ,மரணத்தின் போது நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லையே என்று கூறி சமாளிக்க பார்ப்பார்கள்.(16:28)

No comments:

Post a Comment